Friday, March 20, 2009

இரணிலுக்கு பணம் தருகிறது இந்தியா

ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ ''

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வருகின்றது.இதேபோன்று ஜேவிபி கட்சியிலும் முக்கிய தலைவர்களுக்கும் பெருமளவான நிதியினை '' ரோ '' அமைப்பு வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு சோரம் போயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்ளாது, மக்களுக்கு எதுவித அவலங்களும் ஏற்படவில்லை என நியாயப்படுத்திய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாராளுமன்ற அமர்வுகளின் போது சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிடிக்கு உரையாடுவதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆழ் மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.

நன்றி: பதிவு.காம்

1 comments:

said...

இந்தச் செய்தி உண்மையானதாக இருப்பின், இந்திய மத்திய அரசுக்கு அல்லது அது சார்ந்தவர்களுக்கு இலங்கைத் தீவிலிருந்து கிடைக்கப்போகும் பலன்கள் “றோ” வழங்கும் தொகையை விட அதிகமாக இருக்கும்... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், வசதியுள்ள பக்கம் பாய்கின்றவர்களாக இருப்பது ஆச்சரியமானதல்ல, ஆனால் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள இது ஓர் அரிய சந்தர்ப்பம்...