அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை சிஐஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 10 முக்கிய அம்சங்களை சிஐஐ வலியுறுத்தியுள்ளது.
சிவிலியன்களைக் கட்டுப்படுத்தும் அணு சக்தி விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். தனியார் பங்கேற்கும் அணு மின் நிலையங்களை அரசு மேற்பார்வையிடும் வகையில் அது சர்வதேச விதிமுறைகளுக்கு உள்பட்டதாய் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
விமான எரிபொருளுக்கு 4 சதவீத வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் விமான கட்டணங்கள் கணிசமாகக் குறையும். பெரும்பாலான விமான நிறுவனங்களின் வருமானத்தில் 40 சதவீதம் எரிபொருளுக்கே செலவாகிறது. வழக்கமான பொருளைப் போல விமான பெட்ரோலுக்கும் 4 சத உற்பத்த வரி விதிக்கப்பட வேண்டும்.
அரசு மேற்கொள்ளும் திட்டப் பணிகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அத்துடன் அதில் ஏற்படும் கால தாமதத்துக்கான விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 50,000 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்க்க திட்டக்குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மிகப்பெரிய துறைமுகங்களை நிறுவனங்களாக்க வேண்டும்.
இதன் மூலம் வர்த்தகரீதியில் அவை செயலாற்ற வழியேற்படும். அத்துடன் திட்டமிட்டு செயல்படுவதில் உள்ள இடையூறுகள் நீங்கும்.
மின் திட்டங்களைப் பொருத்த மட்டில் அரசு ஒரே சீரான கொள்கை அறிவிக்க வேண்டும்.
நில ஆர்ஜிதம், தண்ணீர் ஆதாரம், எரிபொருள், சுற்றுச் சூழல், வனம் உள்ளிட்டவற்றில் எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
பெரிய மின் திட்டங்கள் மேற்கொள்வதற்காக அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து திட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி தினமணி, 11.08.2008
0 comments:
Post a Comment