Thursday, November 13, 2008

போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இராசபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் இராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை உலகம் உணர வேண்டும்.

இந்தியப் பிரதமரின் வேண்டுகோளையும், தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் மதிக்க அவர் தயாராக இல்லை. அவருக்குப் பின்னணியில் உள்ள இந்தியாவின் எதிரி நாடுகளே அவரது துணிவிற்குக் காரணம்.

இனி இந்தியா என்ன செய்யப் போகிறது? ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? அல்லது உறுதியான நடவடிக்கை எடுத்துப் போரை நிறுத்தப் போகிறதா? என்பதை அறிய தமிழக மக்கள் துடிக்கிறார்கள். விரைந்து செயற்பட இந்திய அரசு தவறினால் தமிழகம் எரிமைலையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்

2 comments:

Anonymous said...

அதெல்லாம் சரிங்க நண்பரே, தீவிரவாதிங்க போடுர எச்சி ரொட்டியை திங்கிற இந்த நாய், அதாவது பழ.நெடுமாரன் எனும் தேசத்துரோகி, இந்திய அரசால் நசுக்கப்படும் காஷ்மீரிய மக்களுக்காக எப்போது வெடிக்கப்போவுது என்பதனை கேட்டுச் சொல்லவும்.

said...

மொட்டை கடிதாசி எழுதுற தேவடியா பசங்களுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.