Friday, November 21, 2008

மறந்தது ஏன்? மன்னித்தது ஏன்?

தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.



அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

மானமுள்ள தமிழர்களுக்கு உள்ள ஐயம் என்னவென்றால்; இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

2 comments:

said...

சரியான நேரத்தில் நினைவு படுத்தியதற்கு நன்றி

இல்லையென்றால் அவர்களுக்கு இது மறந்து போகும்

said...

நாட்டில் உள்ள காங்கிரசுகாரர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரசுகாரர்களுக்கு உள்ள ஒரே கவலை தன்னுடைய இருத்தலை எப்படி காட்டுவது என்பது தான். அதற்காகவே தற்போது ஈழம் தொடர்பாக உளருகிறார்கள்.