விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திறப்பு விழாவும், வீரவணக்க கூட்டமும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கொள்கைக்காகவே தன்னுடைய பதவியை துறந்தவர். கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் அறிக்கைகளை அமல்படுத்த முயற்சி செய்த போது, அப்போதைய பெரும்பான்மையாக இருந்த பா.ஜ.க, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் வி.பி.சிங் பதவி இழக்க நேரிட்டது.
தன்னுடைய பதவி பறிபோன போதிலும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த போராடியவர் வி.பி.சிங். ராஜவம்சத்தில் பிறந்தவர் வி.பி.சிங். அப்படி ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோரின் கொள்கைகளை படித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடியவர்.
ஜனநாயக கொள்கைகளை நடைமுறைப்படுத்த சிறிது காலம் அரசியலை விட்டே விலகி இருந்தவர். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்டோருக்காக ஜனநாயக முறையில் குரல் கொடுத்தவர் வி.பி.சிங்.
சமூகத்தில் தகதியற்றவர்களாக கருதப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் நீதிக்காக போராடியதால் அவரை சமூகநிதி காவலர் என்று அழைக்கிறோம்.
Thursday, December 11, 2008
கொள்கைக்காக பதவியை துறந்தவர் வி.பி.சிங்-திருமாவளவன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment