இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க நடுவணரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதற்கும் தமிழர்களை படுகொலை செய்ய சிங்களர்களுக்கு இந்திய அரசு உதவி செய்வதற்கும் கண்டனம் தெரிவித்து இந்திய தேசியக் கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாத்திகம் கேசவன் (வயது 60)என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அவர் இந்தப் போராட்டத்தில் நேற்று (07.01.2009) ஈடுபட்டார். தேசியக் கொடிக்குத் தீ வைத்தபோது அந்தப் பகுதியில் சுற்றுக்காவலில் இருந்த காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துத் தீயை அவித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அவர் இந்தப் போராட்டத்தில் நேற்று (07.01.2009) ஈடுபட்டார். தேசியக் கொடிக்குத் தீ வைத்தபோது அந்தப் பகுதியில் சுற்றுக்காவலில் இருந்த காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துத் தீயை அவித்தனர்.
பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்தல் தடுப்புச் சட்டம் (1971) படி நாத்திகம் கேசவன் மீது வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல் துறையினர் அவரை நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர். நீதிபதி ஆணையின் பேரில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
39 comments:
poor oldman . anybody help his release .please
What the hell is this??? If they want to support LTTE, let them to go to the war field and fight the srilankan army, burning our national Flag is heights of stupidy and an unpardonable crime, he should be hanged...
Sriram
Boston USA
to logic less sriram,
if you want to support your mother country, go there and support. dont do it from Boston, USA.
idiotic hell from a old man. put them in jail like seeman and dont release for 3 months.
this useless tamil fanatics were sole responsible for spoiling the support for srilankan tamils in tamilnadu
களப்பிரர் தாங்கள் இலங்கைக்கு போய் ஆதரவு கொடுக்கலாம்.ஐரோப்பாவில் இருந்து தமிழ் ஈழ போராட்டம் செய்வது தான் எத்துணை எளிது. வந்துடானுங்க.
களப்பிரர் லூசு பொத்திகிட்டு போ
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090079285&ch=1/8/2009%207:26:00%20PM
vaalga inthiya, enathu thesam !!!!
இனிய நண்பர் களப்பிரரே
நான் உம்மை போல / அனானியை போல தரம் தாழ்ந்து விளிக்க வில்லை.
என்னதான் சல்ஜாப்பு சொன்னாலும் ஒரு நாட்டின் தேசிய கொடியை எரிப்பது அந்த நாட்டினை அவமதிப்பதேயாகும், என் தாய் நாட்டின் கொடியை ஒருவன் எரித்தால் எனக்கு கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்யும். (நான் எங்கிருந்த்தாலும்), தாயையும் தாய் நாட்டையும் ஆதரிக்க பக்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்ற உமது புரிந்தலை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. உமது state of Mind க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் இலங்கை பிரச்சனை உள் புக விரும்பவில்லை மற்றும் அது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, என் இந்தியாவின் கொடியை எரித்தவனை தண்டித்தே ஆக வேண்டும் என்பதே என் கருத்து, மதுரையை சேர்ந்த ஓர் சகோதரனுக்கு இந்த உணர்ச்சி இல்லை எனக்கண்டு வருந்துகிறேன்.
மேலும் பேச விரும்பினால் பின்னோட்டம் இடலாம் / nsriram73@gmail.com ல் தனிமடல் இடலாம் / 001 781 363 9168 ல் அழைக்கலாம் / தங்கள் தொலைபேசி எண்ணை தெரிவிக்கலாம்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090079285&ch=1/8/2009%207:26:00%20PM
இதில் என்ன தவறு கண்டீர் களப்பிரரே?????
Hi Sriram
'என்னதான் சல்ஜாப்பு சொன்னாலும் ஒரு நாட்டின் தேசிய கொடியை எரிப்பது அந்த நாட்டினை அவமதிப்பதேயாகும்'
this is union of state means many thigs give our High court judgement like Cauvery issue and many other things why our country not take step to the state???
'தாய் நாட்டையும் ஆதரிக்க பக்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்ற உமது புரிந்தலை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. '
it is not laughing mater ram
if you love India means you do service here and give your skill to use to developed inida. but you like U S doller..
'என் இந்தியாவின் கொடியை எரித்தவனை தண்டித்தே ஆக வேண்டும்'
sir ram First you know what is issue of Sri Lanka and what the situation is now.
in all the leader ask to stop war to give presser to Central Govt but central one Old Mukarjii not found any way to go there??
that the anger the great old man do like this.. coll
Govind
chennai
it is great blender mistake the old men done...
மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு ,
தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் , ஒருவர் தன் எதிர்ப்பை காட்டுகிறார் , அவர் இந்திய குடிமகன் , அவருக்கு இதை தவிர வேறு வழி இல்லை ,
அவருடைய கோரிக்கை என்னவென்று பரிசீலனை மட்டுமே செய்யப்பட வேண்டுமே தவிர , தண்டனை வழங்குதல் தவறு , ஏனெனில் அவர் நமது நாட்டின் மூத்த குடிமகன் , தேசிய கொடியை எரிப்பது தேசதுரோகம் , ஆனால் தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்ததால் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது , ஆனால் நம் நாடு இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்து ஒரு இனத்தையே அழிக்க உதவும்போது அவரால் தாங்க முடியவில்லை ,
இலங்கை பிரச்சனை என்பது , அந்த நாட்டுக்குரியது மட்டும் அல்ல , இந்த விடுதலை போராட்டத்தின் தீவிரம் எதற்காக என்பது , அதன் மூல காரணங்கள் தெரிந்தால் மட்டுமே அதன் நியாயம் உங்களுக்கு புரியும் ,
மேலும் தயவு செய்து உங்களுடைய கருத்தை தகாத வார்த்தைகளால் பதிவு செய்ய வேண்டாம் ,
நாம் அனைவரும் இந்தியர்கள் ! நமக்குள் திட்டிக்கொள்ள வேண்டாம் !!
ஈழம் என்பது தமிழர்களின் இன உணர்வு , இந்த நேரத்தில் நாம் கொடுக்கும் உரிமைக்குரல் அங்கு அடிபட்டு சாகும் அப்பாவிகளை காப்பாற்ற உதவும் ,
எனவே தமிழர்கள் அல்லாத சக இந்தியர்கள் , சக இந்திய மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க குரல் எழுப்பவிட்டாலும் பரவாயில்லை , அமைதியாக இருங்கள் உறவுகளே ...
சிறிராம் அவர்களே!
உங்கள் உணர்வைப் புரிந்துகொள்கின்றேன். தேசியக் கொடி எரிப்பது குற்றம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மத்திய அரசு டில்லி அரசாகவே செயற்படுகின்றது. ஈழத் தமிழர் விடயத்தை முற்றாக மறந்துவிட்டு பேசுவோம்.
இந்தியக் குடியரசு ஒரு கூட்டாட்சி அரசு. அதில் ஆளுமையற்ற தலைமை தான் நீண்ட காலமாகவே உள்ளது. காவேரி நீர் பிரச்சனையில் பிரதமர் தலையிடமாட்டார் என தீர்க்கமாக சொல்லிவிட்டார்.
முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு தூக்கிக் காலில் போட்டு மிதித்துவிட்டது.
இதில் மத்திய அரசு கட்சி அரசியல் நடத்துகின்றது.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கின்ற போதே இந்த நெருக்கடியையும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.!!!
கூட்டாட்சி அரசியலில் மத்திய அரசு மாநில மக்களின் உணர்வுகளை மதிக்க கற்க வேண்டும்.
புள்ளிராஜா
சிரி ராம் ,
If they want to support LTTE, let them to go to the war field and fight the srilankan army, -- இது நீங்க சொன்னது .
அதற்க்கு தான் //if you want to support your mother country, go there and support. dont do it from Boston, USA.// தான் சொன்னது !!!
என்ன ராசா, நீ மட்டும் ஈழ ஆதரவுனா, இலங்கைக்கு போனு சொல்லுற. உம் தேசத்தின் கோடியை அவமதிக்குரவன கண்டிக்க அங்க போக மாட்டியா ???
தமிழர்களாகிய அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நாம் முதலில் தமிழன், தமிழ்நாடு பிறகுதான் இந்தியா. நீங்கள் உங்க முகவரி எழுதும்போது கூட முதலில் உங்கள் வீடு எண் அப்புறம் தெரு பெயர் அப்புறம் உங்கள் வட்டாரம், மாவட்டம்,மாநிலம் கடைசியில் தன் ஒரு இந்தியன். எனவே தமிழன் என்று முழக்கம் முதலில் அப்புறம் தான் என் நாடு என் தேசம் போன்ற சொற்கள்.
நாட்டு பற்றோ, மொழி பற்றோ இல்லாவிடின் ஒன்றும் கவலை இல்லை அனால் இனப்பற்று இருக்க வேண்டும். நாம் எல்லோரும் தமிழன்.
இந்திய தேசியக்கொடியை எரித்தது தவறு. அதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால் புது டில்லிதான் தமிழ்நாட்டை மதிப்பதே இல்லையே. இலங்கைத் தமிழரை விடுங்கள். இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர்களுக்காகவாவது ஏதாவது ஒரு குரல் கொடுக்கிறதா??
இந்திய கடற்படை தளபதி இலங்கை கடற்படை அவ்வாறு செய்வதில்லை என்று கூறுகிறார்.
இது ஒரு உதாரணம்தான்.
இது போன்று
கேரளா, கர்நாடகா எல்லாம் தமிழ்நாட்டை ஒரு எதிரி "நாடு" போல் எண்ணுகின்றன?
இது போன்ற சம்பவங்கள் அந்த வயோதிபரை அப்படி செய்யத் தூண்டியிருக்கலாம்.
அவரை தண்டிப்பதைவிட எது அவ்வாறு செய்யத்தூண்டியது என்று விசாரியுங்கள். புரியும்!!
சிங்களக் கொடி தாங்கிய இலங்கைப் போர்க் கப்பல் இந்திய மீனவர்கள் 300 போரை நடுக்கடலில் சுட்டபோது
இந்தியத் தேசியக் கொடி தாங்கி போர்க் கப்பல் ஏன் அனுப்பப்படவில்லை?
பாதுகாப்புச் செயலர் நாரயணன் என்ன செய்தார்?
இறக்கின்ற தமிழக மீனவர்கள் இந்தியர்கள்தான் என்ற உணர்வு ஏன் டில்லி அரசுக்கு ஏற்படவில்லை?
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் உலகத்தை அழிக்க அறை கூவிய பாரதி பிறந்த மண்ணில்தானே பிறந்தீர்கள்?
இது ஒரு மனிதனுக்கு தன் தேசியத்தின் மீது ஏற்படும் வெறுப்பு.
மத்திய அரசு மாநிலப் பாரபட்சம் இல்லாமல் ஆளவேண்டும்.
மீனவன்
SRI RAM!!
சிங்களக் கொடி தாங்கிய இலங்கைப் போர்க் கப்பல் இந்திய மீனவர்கள் 300 போரை நடுக்கடலில் சுட்டபோது
இந்தியத் தேசியக் கொடி தாங்கி போர்க் கப்பல் ஏன் அனுப்பப்படவில்லை?
பாதுகாப்புச் செயலர் நாரயணன் என்ன செய்தார்?
இறக்கின்ற தமிழக மீனவர்கள் இந்தியர்கள்தான் என்ற உணர்வு ஏன் டில்லி அரசுக்கு ஏற்படவில்லை?
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் உலகத்தை அழிக்க அறை கூவிய பாரதி பிறந்த மண்ணில்தானே பிறந்தீர்கள்?
இது ஒரு மனிதனுக்கு தன் தேசியத்தின் மீது ஏற்படும் வெறுப்பு.
மத்திய அரசு மாநிலப் பாரபட்சம் இல்லாமல் ஆளவேண்டும்.
மீனவன்
முதலில் நமது தேசிய கொடியை எரித்தது தவறு என்று பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.
காஷ்மீர் விடுதலைக்காக மும்பையில் 300 பேரை சாகடித்தோம் என்று தீவிரவாதிகள் கூறினால் அதை ஒத்துக்குவீங்களா புள்ளிராஜா / களபிறர் ???
யார் என்ன கூறினாலும் என்னால் இந்திய தேசிய கொடியை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. நான் இதை சும்மா கூறவில்லை, ஒரு முறை என் மனைவி என்னிடம் கொடி எரியும் போது நான் ஆபத்தில் இருந்தால் யாரை முதலில் கவனிப்பீர்கள் என்று கேட்டதற்கு இந்திய கொடியை என்று சொன்னவன் நான் ( I swear) . இந்த வலைபக்கத்தில் யாருக்கும் என் தேச பக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் USA ல் இருந்தாலும் நான் ஒவ்வொரு மாதமும் அனுப்பும் 5000 $ இந்தியாவை வளப்படுதிக்கொண்டு தான் இருக்கிறது. நான் இந்தியாவில் இருந்த போது தொடங்கிய Charity USA வந்த பின்புதான் அதிக அளவில் செய்ய முடிகிறது. இந்தியாவில் இருந்தால்தான் இந்தியாவை நேசிக்க முடியும் என்பது JOKE.
இந்திய நடுவண் அரசு இலங்கை பிரச்சனையில் ஒன்றும் செய்யவில்லை / செய்யாது. இந்த தமிழக அரசு என்ன செய்தது, ராஜினாமா நாடகம், உண்ணாவிரத நாடகம், மனித சங்கிலி நாடகம் ஆகியவற்றை தவிர்த்து ஒன்றுமே செய்யவில்லை.
வை கோ, நெடுமாறன் போன்ற சிலரை தவிர்த்து யாருக்குமே இதை பற்றி கவலை இல்லை, திருமங்கலம் தேர்தல், குடும்ப ஒற்றுமை, அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டு இவையே தி மு க, admk வின் கவலை, 40 MP மற்றும் 12 central ministers என்ன செய்றாங்க????
இதை எல்லாம் போய் கேளுங்க, வந்துட்டானுங்க கொடியை எரித்தவனுக்கு support செய்ய, இதை எடுத்து சொன்னா, அமெரிக்காவிலுருந்து இந்தியா வா என்று எகத்தாளம் வேற
அன்புடன்
ஸ்ரீராம்
//இனப்பற்று இருக்க வேண்டும். நாம் எல்லோரும் தமிழன்.//
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. தமிழ்நாட்டுல எந்தக் கட்சிக்காவது தமிழன் தலைவனா இருக்கானா? தமிழனத்தலைவனே ஒரு தெலுங்கு குடியேறிதானே? இவர்கள் எப்படி தமிழன் நலனுக்கு போராடுவார்கள்?
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090079285&ch=1/8/2009%207:26:00%20PM
vaalga inthiya, enathu thesam !!!!//
ஆமாம், பாலஸ்தீனத்த ஆதரிச்சா முஸ்லிம் ஒட்டு கிடைக்கும். ஆனா 1000 ருபாய் கொடுத்து பிரியாணி போட்டாலே ஒட்டு போடுற கம்மனாட்டிகளுக்கு இவ்வளவுதான் மதிப்பு! இதுல நாடுக் கொடிய வேற எரிக்க ஆதரவு வேற! ஏண்டா பொறம் போக்குகளா ஈழத்தவனை கைவிட்டால் ஒட்டு கிடைக்காது எனில் இப்படி பண்ணுவானுகளா இந்த ஓட்டு பொறுக்கிகள்?
நம்மகிட்ட இருக்கற குறைய முதல்ல சரி பண்ணுங்கடா, அத விட்டுபிட்டு ஆத்தா புடவய உருவி எரிக்குறானுவ, விளாங்காத பயக!
(உண்மையான) தமிழர்கள் மனதளவில் 'இந்தியாவின்' தேசியக் கொடியை எப்போதோ எரித்து விட்டனர்.
வாழ்க தமிழ். வெல்க தமிழினம்.
//கேரளா, கர்நாடகா எல்லாம் தமிழ்நாட்டை ஒரு எதிரி "நாடு" போல் எண்ணுகின்றன?//
சேச்சே அவர்கள் திராவிட சகோதரர்கள், நமக்குதான் திராவிட முன்னேற்றம்தான் குறிக்கோளாயிற்றே! டில்லிகாரன் ஏதாவது செய்தால்தான் நாம் எதிர்க்க வேண்டும் அவர்கள்தாம் ஆரியர்கள்.
ஆனால் இப்ப அதிலும் பிரச்சனை நம்மை கொள்ளை அடிக்க அவனுக கூட்டணி சேத்துகிட்டனுவளே... ஸ்பெக்ரம் அது இதுன்னு தேத்தி ஸ்விஸ் பாங்கு அக்கவுண்ட் பேலன்ஸை ஏத்துற விட்டுபிட்டு ஈழமாம் தமிழனாம் போங்கட பொழைக்க தெரியாத பசங்களா!
//
ஒரு முறை என் மனைவி என்னிடம் கொடி எரியும் போது நான் ஆபத்தில் இருந்தால் யாரை முதலில் கவனிப்பீர்கள் என்று கேட்டதற்கு இந்திய கொடியை என்று சொன்னவன் நான் ( I swear) .
//
முட்டாள். நல்லா தான் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறாய். ஒரு உயிரவிட கொடி பெருசா போச்சா? அப்படின்னா அதான் கொடியை எரிச்சிட்டாங்க இல்ல. நீயும் தீக்குளிச்சு சாவ வேண்டியது தானே மூட நம்பிக்கையின் மொத்த உருவமே.
//
ஒரு முறை என் மனைவி என்னிடம் கொடி எரியும் போது நான் ஆபத்தில் இருந்தால் யாரை முதலில் கவனிப்பீர்கள் என்று கேட்டதற்கு இந்திய கொடியை என்று சொன்னவன் நான் ( I swear) .
//
இந்த பேக்கு பயபுள்ள ரொம்ப அர்ஜூன் படம் பாக்கும் போல. பாவம் அவர் மனைவி.
இந்தியா என்பது பல தேசிய இனங்களையும் அவர்களின் தேசங்களை உள்ளடக்கிய ஒரு ஆட்சிப்பரப்பு. அந்த ஆட்சி பரப்பே இந்திய நாடு என்று நமது அரசமைப்புச் சட்டம் சொல்கிறது.
இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதிலும் உரிமைகளை பாதுகாப்பதிலும்தான் அதன் இறையாண்மை அடங்கியுள்ளது.
இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.
அந்தவகையில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கத் தவறிய, உணர்வுகளை புரிந்துகொள்ளாத இந்திய அரசின் ஆட்சியாளர்கள்தான் இறையாண்மைக்கு எதிராக உள்ளார்கள். தேசத்துரோகத்திலும் ஈடுபடுகிறார்கள்.
நாட்டுப்பற்றுடன் வாழ்ந்த அந்த முதியவர், இந்த நாட்டின் மூத்த குடிமகன், முன்னாள் அரசு ஊழியர், வாழ்நாள் முழுவதும் சமூகத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு இந்தியர் தான் நேசித்த நாடு, தான் போற்றி மதித்த தேசியக்கொடியின் பெயரால் தன் இனத்திற்கு எதிராக, தன் உணர்வுக்கு எதிராக, தன்னுடைய எண்ணத்திற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயலாற்றும்போது தன்னுடைய எதிர்ப்புணர்வை எப்படி வெளிப்படுத்துவது?
இன்றைக்கு நமது நாட்டில் தேசியக்கொடி ஏற்றும் ஆட்சியாளர்கள் அனைவருமே தேசப்பற்று இல்லாமல் தேசியக்கொடியை கிழித்து கோவணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள்தான் தேசப்பற்று உள்ளவர்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி அவர்கள் கட்டிய கோவணங்களில் ஒருசில இஸ்திரி போட்டு சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதை நாட்டுப்பற்றுள்ளவர்கள் உணரவேண்டும்.
"Koodi vazhnthaaL kOdi naNmai"
"Vanthaarai vazha vaikum Tamizhagam"
These are famous Tamil saying, and to prove that, many have migrated to Tamilnadu and made a living and prospered. But when a Tamil turns around asks the country to notice his pains, give some alms to his sufferings, they are scorned at. Even to take water from their own land, India is barring them! As a country, India wants the tax money of Tamilnadu, but is not willing to help Tamils when needed. None of the so-called Dravidan states even, are willing to give water, etc. Even when they can spare. You want to drain the resource, manpower, money of Tamilnadu, live of its taxes, but not help those people? How are these people supposed to feel that this is one country.
Over the past decade, I have been looking into the other states of India. If you read forums, opinions, papers of other states, you will realize that they all have some sort of dislike for Tamilnadu and each other. I don't know if it jealousy, if it is politician influenced hatred, but even educated masses of Kerala will say things such as; and this, in a state that is linguistically and culturally still attached to Tamil. Imagine the rest!
Let's not talk about the rich, the middle class of various stages, nor about the patriots sitting on foreign lands who make patriotic dialogues or criticize the governance, though they don't give a cent towards improvement of poorer or ignorant people! Lets talk about the average men and women in Tamilnadu. How are they supposed to feel patriotic for the country, when their identity itself is ridiculed? When their basic needs are shunned by the country? When their pride is oppressed? You want people to be proud of a country that has given no hope to the common man, but will not even answer properly his questions.
And these questions are not just being asked by Tamils. All those suffering due to oppression are raising their voices!
As Vairamuthu said in the Hogenakkal Issue, the thread that has tied India together for the last 60 years is slowly loosing its strength. Its best that politicians /upper class/ domineering people/states all start to think before things start to go out of control. India has a tough enough time managing a flaming Kashmir on it's head. It can't stand if it loses it's legs.
-kajan
கரிகாலன் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன்.இந்த வயதில் அவருக்கு இந்த எண்ணம் எழுந்து உள்ளது என்றால் தவறு யாரிடம் என்று சிந்தியுங்கள். தன் இனம் அழிவதை பொறுத்து கொள்ள முடியாத சொரணை உள்ள மனிதன்.
"ஒரு முறை என் மனைவி என்னிடம் கொடி எரியும் போது நான் ஆபத்தில் இருந்தால் யாரை முதலில் கவனிப்பீர்கள் என்று கேட்டதற்கு இந்திய கொடியை என்று சொன்னவன் நான் ( I swear) .
//
முட்டாள். நல்லா தான் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறாய். ஒரு உயிரவிட கொடி பெருசா போச்சா? அப்படின்னா அதான் கொடியை எரிச்சிட்டாங்க இல்ல. நீயும் தீக்குளிச்சு சாவ வேண்டியது தானே மூட நம்பிக்கையின் மொத்த உருவமே.
இந்த பேக்கு பயபுள்ள ரொம்ப அர்ஜூன் படம் பாக்கும் போல. பாவம் அவர் மனைவி."
சைகோ சீராம் உன் பாப்பான் புத்தியை இங்க காட்டாதே..
Govind
chennai
Dear SRI RAM!!!!!!!!!!!!!!!
"நான் இதை சும்மா கூறவில்லை, ஒரு முறை என் மனைவி என்னிடம் கொடி எரியும் போது நான் ஆபத்தில் இருந்தால் யாரை முதலில் கவனிப்பீர்கள் என்று கேட்டதற்கு இந்திய கொடியை என்று சொன்னவன் நான் ( I swஎஅர்)"
இதனால் உங்களுக்கு உங்கள் மனைவி மீது பாசம் இல்லை எனக் கருத முடியாது. நாட்டை நேசிக்கின்ற மனிதன் தன் மனைவியையும் நேசிப்பான். சந்தேகமில்லை.
உணர்ச்சி வேறு பகுத்தறிவு வேறு.
கொடி தேசத்தின் அடையாளம் அதை அவமதிக்கிறதை யாரும் விரும்புவதில்லை.
புலிகள் இயக்கத்தை நேசிக்கின்ற ஒருவர் பிரபாகரனைவிட புலிக்கொடிதான் முக்கியம் என்று சொன்னால் அது எவ்வளவு புத்திசாலித்தனம் இல்லையோ அதுதான் மனைவியை விட கொடி பெரிது என நினைப்பதும்.
அதி தீவிர உணர்ச்சிதான் மற்றொரு வழியில் கண்மூடித்தனத்தையும், தீவிரவாதத்தையும் உருவாக்குகின்றது.
கொடி எரித்தவரை சட்டத்தின் முன் நிறுத்த கால அவகாசம் உண்டு.
அன்பு மனைவியை தீயில் விட்டால் ...அவகாசம் கிடையாது நண்பா!!
PULLIRAJA
// "நான் இதை சும்மா கூறவில்லை, ஒரு முறை என் மனைவி என்னிடம் கொடி எரியும் போது நான் ஆபத்தில் இருந்தால் யாரை முதலில் கவனிப்பீர்கள் என்று கேட்டதற்கு இந்திய கொடியை என்று சொன்னவன் நான் //
I hope your wife wont get in to such situation! It would be very sad if she became victim for your patriotism!!
பொண்டாட்டியை போனாலும் தேசபக்தி கொண்டாடும் தலைவா!
பாரதமாதாவை இத்தாலிஜி ஆட்சி செய்யும்போது என்னண்னா செய்றீங்க!
ஆண்டிப்பட்டி பண்ணையார்
//நாட்டுப்பற்றுடன் வாழ்ந்த அந்த முதியவர், இந்த நாட்டின் மூத்த குடிமகன், முன்னாள் அரசு ஊழியர், வாழ்நாள் முழுவதும் சமூகத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு இந்தியர் தான் நேசித்த நாடு, தான் போற்றி மதித்த தேசியக்கொடியின் பெயரால் தன் இனத்திற்கு எதிராக, தன் உணர்வுக்கு எதிராக, தன்னுடைய எண்ணத்திற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயலாற்றும்போது தன்னுடைய எதிர்ப்புணர்வை எப்படி வெளிப்படுத்துவது?//
ஏன், சிங்களனுக்கு உதவும் இத்தாலி சீமாட்டியையும,அவருக்கு பல்லாக்கு தூக்கும் தமிழனத்தலைவன் எனச் சொல்லிக் கொள்கிற ஆளையும் அவர்களது அடிப்பொடிகளையும் செருப்பால அடிக்க வேண்டியதுதானே?
அதைவிட்டு தேசக் கொடியினை எரிப்பது நம்மையே இழிவு செய்து கொள்வதாகும்! இவனுக செய்யும் தவறுக்கு நாடு என்ன செய்யும்? தேசக்கோடி, ஈழத்தை ஆதரிக்கும் நம்மையும்தான் குறிக்குது, இதனை முதலில் அந்த முட்டாள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!
இந்திய ஆட்சியாளர்கள் நாடு, சட்டம், இறையாண்மை, தேசியக்கொடி, நாட்டுப்பற்று, ஒற்றுமை என்று அனைத்தின் பெயராலும்தான் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள்.
//இந்திய ஆட்சியாளர்கள் நாடு, சட்டம், இறையாண்மை, தேசியக்கொடி, நாட்டுப்பற்று, ஒற்றுமை என்று அனைத்தின் பெயராலும்தான் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள்.//
தமிழினம்,தமிழ், பகுத்தறிவு என்கிற நல்ல விசயங்களின் பெயரில் தமிழக ஆட்சியாளர்கள் பல அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள். இவற்றையும் தூக்கி எறிந்துவிட வேண்டியதுதானா?
பொறுத்து பார்த்துவிட்டுத் தான் பொங்கி எழுந்துள்ளார்.
தன் இனம், கண்முண்னே அழிக்கப்படுவதை
பார்க்க முடியாமல் தான் இந்த தவறை செய்துள்ளார்.
இது சட்டத்திற்கு வேண்டுமானால் தவறாகலாம்.ஆனால்
எதிர்ப்பை தெரிவிக்க அவருக்கு முழு உரிமை உண்டு.
முன்பு திராவிடர் கழகம் கூட அரசியல் சாசனத்தை எரித்ததாக
படித்திருக்கிறோம்.அது பேப்பர்....தோழர் எரித்தது துணி அவ்வளவே.!
சிறி ராம்!!
உன் தேசபக்தி மெய் சிலிர்க்க வைக்கின்றது!
இந்தியாவில் நாம் வெள்ளையரை வெளியேற்றிப் பெற்றுக்கொண்ட சுதந்திரம் எங்கே?
தேசிய காங்கிரசைக் கலைத்துவிடச் சொன்னேன். என்ன நடந்தது?
இத்தாலியப் பெண்னை பாரதமாதாவாக இருக்கும் போது நீ ஏன் பொங்கி எழவில்லை?
பொண்டாட்டியை தீயில் விடத் தயாரான நீ அமெரிக்காவில்.
தேசத்தின் உச்சியில் ரோம இராட்சியம்.
நீ அனுப்பும் $5000 முக்கியமல்ல. உன் சேவைதான் தேவை. நாடு திரும்புவாயா?
மகனே! சிறிராம்!!!
சுதந்திர தின விழா நடைபெற்றபோத தனிமையில் ஆச்சிரமத்தில் இருந்து ராட்டினம் சுற்றினேன்.
ஏன்?
உதவாக்கரைகளின் கையில் நாடும், காங்கிரசும் போய்விட்டது என்ற வருத்தத்தில்தான்.
பகுத்தறிவில்லாத தேச பக்தி முட்டாள்களின் சொர்க்கம்.
பொண்டாட்டியை எரிக்க நீ தயார்.
உன் பிள்ளை தன் தாயை எரித்தவனை என்ன செய்யும் தெரியுமா?
சிந்தி.
மகாத்மா காந்திஜி
இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?
பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.
யாரோ பத்து பதினைந்து பேர் அல்லது ஏதோ ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது இந்திய ஆட்சியாளர்கள் சொல்வதுபோல் பாக்கிஸ்தான் அரசால் அனுப்பப்பட்ட பயங்கரவாதிகள் மும்பையில் ஊடுருவி 200 பேரை கொன்று குவித்தார்கள். இந்நிகழ்வை தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே கண்டிக்கிறார்கள் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதற்காக இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்களும் அரசியல் கட்சியினரும் பாக்கிஸ்தான் மீது போர்தொடுக்கவேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். அவர்களின் உணர்வை மதிக்கிறோம். (போர் தொடுத்தாலும் பயங்கரவாதம் அழியாது என்பது வேறு)
ஆனால், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்வது உலக நாடுகளால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு அரசு. அந்த இலங்கை அரசின் இராணுவம்தான் இதுவரை 400 இந்திய தமிழர்களை கொன்று குவித்துள்ளது. நேரடியாக ஒரு நாட்டின் இராணுவம் மற்றொரு நாட்டின் மக்களை கொன்று குவிக்கும் போது அந்த மக்களுக்கான ஆட்சி, அதிகாரம், இராணுவம், காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது. சொந்த நாட்டுமக்களை அன்னிய நாட்டு படையிடமிருந்து பாதுகாக்காத அரசு, இதுவரை வார்த்தை அளவில் கூட கண்டிக்காத, தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யாத ஒரு அரசை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன?
///sriram said...
What the hell is this??? If they want to support LTTE, let them to go to the war field and fight the srilankan army, burning our national Flag is heights of stupidy and an unpardonable crime, he should be hanged...
Sriram
Boston USA////
hahahahhahahahahahhahahahaahhahahaahhahahahhaahahhahahahahahhahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahaahahahahahahhahahhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhahahahahhahahhaah....I can't able to control..hahahah
Post a Comment