Monday, August 11, 2008

பாடகர் டி.எம்.சௌந்திரராசன்-பி.சுசீலா ஆகியோர் தமிழர்களா?

பிரபல பாடகர் டி.எம்.சௌந்திரராசன் மற்றும் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு பாராட்டு விழா அன்மையில் மதுரையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பாராட்டப்படவேண்டியவர்கள் பாராட்டப்பட்டுள்ளனர். மிக்க மகிழ்ச்சி.


இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர் அவர்கள் டி.எம்.சௌந்திரராசன் அவர்களை ஒரு “தமிழனுக்கு” நடைபெறும் பாராட்டுவிழாவில் தமிழனாகிய நான் தலைமையேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று வளிந்து குறிப்பிட்டார்.


திரு. டி.எம். சௌந்திரராசன் அவர்கள் ஒரு சௌராஷ்டிரர் என்பதும், நடைபெற்ற பாராட்டுவிழாவில் சௌராஷ்டிர சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டதும், அந்தச் சமுதாய மக்களுக்கு சிறப்பான வரவேற்பும், தனி இருக்கைகள் வழங்கப்பட்டன என்பதும் அனைவரும் அறிந்ததே.


தற்போது தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயம் சௌராஷ்டிர மக்கள் தமிழர்களா? என்பதுதான். அவர்களின் தாய்மொழி தமிழா? சௌராஷ்டிரமா?


தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால், அண்டை மாநிலங்களில் அண்டை நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் யார்?


தனக்கு ஒத்துப்போகும் வகையில் தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதுமே தவறான அடையாளங்களையும், தவறான தலைமையையும் அடையாளங்காட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் நடிகர் இரசினிகாந்து அவர்களையே தமிழர் என்று அடையாளம் காட்டியதால் தமிழர்களுக்கு இந்த ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளது.


தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பாடல்களை மிகச்சிறப்பாக பாடிய டி.எம்.சௌந்திரராசன் அவர்களையும் பி.சுசீலா அவர்களையும் தமிழர்கள் அனைவரும் மனதார, உளமார, உண்மையா பாராட்டுகிறோம், போற்றுகிறோம், மதிக்கிறோம். அதற்காக அவர்களை தமிழர்களாக ஏற்க................. முடியுமா?

9 comments:

said...

//தற்போது தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயம் சௌராஷ்டிர மக்கள் தமிழர்களா? என்பதுதான். அவர்களின் தாய்மொழி தமிழா? சௌராஷ்டிரமா?//

பூர்வீகம் வேறாக இருப்பினும் ,குடும்பங்களாக வந்து பல தலைமுறைகளாக தமிழகத்தில் வாழ்ந்து தமிழர்களோடு தமிழராக கலந்து ,நானும் தமிழன் எனும் உணர்வு கொண்டுள்ள அத்தனை சவுராஷ்டிரர்களும் தமிழர்களே!

said...

பிறந்ததில் இருந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழனே!

said...

பாடகர் டி.எம்.சௌந்திரராசன்-பி.சுசீலா ஆகியோர் தமிழர்களா
என்றால் அது அவர்களது மனதை பொருத்து, தமிழகத்தில் பிறந்தால் மட்டும் ஒருவன் தமிழன் ஆகிவிட முடியாது, எவன் ஒருவன் தமிழ் மேல் அன்பும் பற்றும் வைத்திருக்கிறானோ அவன்தான் உண்மை தமிழன், எ-டு தமிழை இழிவாகவும்,சமஸ்கிருத்தையும், ஹிந்தியையும் பெருமையாக பேசும் பார்பனன் பிறப்பால் தமிழன்தான் அதற்காக அவன் உண்மை தமிழன் ஆகிவிடுவானா. இவ்வுளவு ஏன்டா தமிழன்னாகிய நீ,நா கும்பிடும் கோயில்களில் தமிழ் ஓலிக்கபடுகிறதா இல்லையே
அன்று கோயிலுக்கு செல்வதை நிருத்தியவன்தான், தமிழ் கடவுள் முருகனுக்கே இந்த நிலமைதான், பார்பனனை என்று நம் தமிழ்நாட்டில் இருந்து துரத்துகிறோமோ அன்றுதான் தமிழ் கோயில்களில் ஓலிக்கபடும்
வாழ்க தமிழ்!!!

said...

உலகில் உள்ள மக்களின் தாய்மொழியை அடிப்படையாக் கொண்டே இனங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன...

வெளிநாடுகளில் வாழும் பல தமிழர்கள் தன்னை வெள்ளைக்காரர்களாகவே நினைத்துக்கொண்டு நடை, உடை, செயல், பேச்சு, எழுத்து என அனைத்தையும் மாற்றிக்கொண்டு ஆங்கிலேயர்கள் போலவே வாழ்கிறார்கள்.

ஆங்கிலேயர்களைப் போல் வாழ்கின்ற எவனையும் ஆங்கிலேயர்கள் ஆங்கிலேயர்களாக ஏற்றுக்கொள்வதில்லை...

எல்லா இனத்திலும் துரோகிகள், திருடர்கள், அயோக்கியர்கள், கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவன் அந்த இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று யாரும் அவனை ஒதுக்கிவிடவில்லை.

பாவேந்தர் மொழியில் சொல்வது என்றால்

“எங்குபிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலன் அயலனே”

தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் உழைத்த பிற இனத்தவரை அதற்காக ஒதுக்க வேண்டிய அவசியமில்லை...

வேற்று இனத்தைச் சேர்ந்தவரே நம் இனத்திற்காக பாடுபட்டார் என்றால் நம் இனத்திற்காக நாம் எப்படி உழைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தி தூண்டலாம்...

said...

தமிழ்நாட்டில் இருந்து சென்று வெளிநாடுகளில் வாழும்,வீட்டில் தெலுங்கு,கன்னடம்,செளராஷ்ட்ரா போன்ற மொழிகளைப் பேசும் தமிழர்கள் வெளிநாட்டிலும் தங்களைத் தமிழர்களாகவே அடையாளம் கொள்கிறார்கள்.எனென்றால் அவர்களுடைய வேர் தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது.மாறாக தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்றுள்ள மலையாளிகள்,மற்றும் வட நாட்டவர்கள், மட்டும் தங்களை மலையாளிகளாகவோ,வடநாட்டவர்களாகவோ அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள்.எனென்றால் அவர்களுடைய சொந்தபந்தவேர்கள் கேரளத்திலேயே(வடநாட்டில்) உள்ளன.அவர்கள் தங்களைத் தமிழகத்தில் பிழைக்க வந்தவர்களாகவே கருதுகின்றனர்.
மற்றவர்,தமிழகத்தை மட்டும்தான் தன் மண்ணாக கருதுகிறார்கள்.எனவே அவர்கள் தமிழர்கள் என்பதில் எந்த ஐயமே இல்லை.

said...

தமிழ் நாட்டிலே பிறந்தும் தமிழைத் தங்கள் தாய் மொழி என்று கூறிக்கொள்வோர் படிக்கும்போது ஹிந்தி அல்லது வடமொழி அல்லது பிரெஞ்சு போன்ற மொழிகளை இரண்டாம் பாடமாக எடுத்துக்கொள்பவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால் தமிழ் நாட்டிலே பிறந்து தமிழையே பாடமாக எடுத்து தமிழ் பாட்டு பாடுபவர்கள் எல்லாம் தமிழர்கள் தாம்.அந்த வகையில் பார்த்தால் திரு T.M. சௌந்தரராஜன் அவர்கள் நூறு சதம் தமிழரே!
நடனசபாபதி சென்னை

said...

தமிழுக்கு உழைத்தவன் தமிழனா?
தமிழால் உழைத்தவன் தமிழனா?

said...

saniyan comment is :Nethhiyadi;

said...

தமிழ் இனத் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ் இனத்தின் அழிவிற்கு காரணமாக இருந்தவர்களும் , சன்ரைஸ் டீம் என்னும் பெயரில் சிங்களவர்களை கிரிக்கெட் விளையாட அழைத்து வந்த சன் டிவி குடும்பத்தாரும், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் தமிழ் மொழி காட்டுமிராண்டிகள் மொழி என்று கூறியவரும் அவர்வழி வந்தவர்கள் என்று கூறுபவர்களும் தமிழர்கள் என்றால் , பரம்பரையாக மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் தங்களுடைய உழைப்பிலே வாழ்பவர்களுமான சௌராஷ்டிரர்கள் தமிழர்களே