Thursday, September 11, 2008

எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது - பழ. நெடுமாறன்-3

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
... ...
எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது. அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து பாடுபடுகிறது.

இது ஒன்றும் வேடிக்கைக்கான மாநாடு அல்ல. இவ்வளவு பேரை நாம் திரட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான மாநாடு அல்ல. லாரிகளிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சேர்க்கப்பட்ட கூட்டமல்ல இது. இயற்கையான உணர்வு படைத்தவர்கள் அவரவர்களாகச் சொந்தச் செலவிலே ஏதாவது ஒன்றை அடகு வைத்து வந்து இருப்பார்கள் - எனக்குத் தெரியும். இந்த உணர்வு என்பது அவ்வளவு எளிதிலே வந்து விடாது. அதைக் கண்டு அச்சமாக இருக்கிறது. எப்படி கூட்டம் கூட்டுகிறார்கள். நாம் ஒரு மாநாடு போட வேண்டுமானால் பல இலட்சம் செலவழித்து மக்களைக் கூட்ட வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறார்கள். உணர்வின் அடிப் படையில் நாம் திரட்டுகிறோம். மக்களைத் திரட்டினால்தான் மாற்றம். அதை நாம் செய்ய வேண்டும். உலக மொழியாக நம் மொழி உயர்ந்து இருக்கிற இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள குறிப்பான இனமாகவும் தமிழன் மாற வேண்டும்.

நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும். உலகத்தின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு நம்மால் உதவ முடியும். நாம் வலிவு இல்லாமல் போனால் நம்மையும் காத்துக் கொள்ள முடியாது நம்மைச் சார்ந்து இருக்கிற மற்ற தமிழர்களையும் நாம் காப்பாற்ற முடியாது.

தொடரும்...

2 comments:

said...

//ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது.// அண்டை மாநிலங்களில் உள்ள மக்களைப் பார்த்தாகிலும் தமிழகத் தமிழர்கள் ஒன்றுபட்டு தமிழர் நலனை முன்னெடுக்கும் தலைவர்களின் பின்னால் அணிதிரள வேண்டும்.

//நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும்.// இப்படி வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனையும் ஒருசேர நினைக்கும் ஐயா பழ.நெடுமாறனார் அவர்களைப் போற்றுகின்றேன்.

உலகத்தமிழருக்காக உலக அரங்கில் ஒரு தமிழன் குரல் ஓங்கி ஒலிக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்.

said...

தமிழ்நாட்டு தமிழர்களும் இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழுக்கின்ற தமிழர்களும் உலகத் தமிழர்களும் தமிழுக்காக தமிழர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார்? நமக்கு தலைவராக இருக்க தகுதி உடையவர் யார்? தமிழர்களின் கடமை என்ன? -என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது தமிழனத்தின் தற்போதைய அவசரத்தேவை...

இதுபற்றி ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து செயல்படவேண்டும்.