Saturday, November 8, 2008

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கும் பொதுவுடமை அரசு

நேபாளத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி அளிப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளும் படிப்படியாக அரசுப் பள்ளிகளாக மாற்றப்படும் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கினால் கல்வியின் நடைபெறும் பகல் கொள்ளையை தடுக்கலாம். இந்தியாவில் கல்வித்துறைக்கு ஒதுக்கும் பணத்தை முறையாக பயன்படுத்தினால் இங்கேயும் அனைவருக்கும் நல்ல தரமான இலவச கல்வி வழங்கலாம். கல்வி வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்தியாவில் பொதுவுடமை கட்சியினர் ஆளும் மாநில அரசுகளாவது இதுபற்றி சிந்திக்குமா?

2 comments:

said...

உங்கள் கருத்துகளை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

தனியார் பள்ளிகளின் கொள்ளை மட்டும் தாராள மயமாக்கப்பட்டு இருக்கிறது.

என்ன கொடுமை சார் இது?
உங்கள் பதிவைப் படித்தவுடன் நான் எனக்குள் கேட்பது இதுதான்.

said...

கல்வியும், மருத்துவமும் நாடு முழுவதும் அரசுடமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பான கருத்துருவாக்கத்தில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும்.