தகவல் தொழிற்நுட்பமும் இணையதள சேவைகளும் உலகெங்கும் பரவியிருக்கும் இக்காலத்தில் உலகில் உள்ள அனைத்து நிர்வாக அமைப்பு முறைகளும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியும் அதனுடைய செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுதல், சமூதாயக்கூடங்களை பதிவு செய்தல், விண்ணப்பங்களை பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை இணைதளம் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. http://www.chennaicorporation.gov.in/
மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காத்துக்கிடப்பது இதனால் தவிர்க்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை சென்னை மாநகராட்சி செய்துவருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சியை பாராட்டுகிறோம்.
ஆனால், தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனியும் வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழர்களே வாழவில்லையா? என்ற ஐயமும் இதனால் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளுவதற்காக தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியாம் தமிழை புறக்கணிப்பதும் அதுபற்றி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு செயல்படுவதும் வேதனையளிக்கிறது.
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம், தமிழனின் தலைநகரம், தமிழர்கள்தான் அங்கு வாழ்கிறார்கள், தமிழர்கள்தான் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியை புறக்கணிப்பதற்கான காரணம் என்ன?
இன்றைக்கு தகவல் தொழிற்நுட்பத்துறையில் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது என்பதும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் கணினி தொடர்புடைய அனைவரும் அறிந்ததே!
தமிழ்நாடு அரசும் பல துறைகளின் சேவைகளை இணையத்தின் வழியாக தமிழ் மொழியிலேயே வழங்கிவருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் வழியாக வழங்கும் செய்தி, தகவல்கள், மாநகராட்சியின் செயல்பாடுகள், இணையவழிச் சேவைகள், துறை செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், மண்டல விவரங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கும் விவரங்கள், படத்தொகுப்பு, அனுமதி பெற்ற நில அளவீட்டாளர்கள் விவரம், மாநகராட்சி திட்டமிடுதல் போன்ற அனைத்து விவரங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன.
சென்னை மாநகராட்சி என்ற பெயர், ஒரு திருக்குறள், நகர தந்தை (மேயர்) பற்றிய விவரம், நிதிநிலை அறிக்கை, விண்ணப்பங்கள் போன்ற ஒருசில விவரங்கள் மட்டுமே தமிழில் உள்ளன. இவைகளும் நேரடியாக தமிழில் இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட படியிலிருந்து ஒளிபடி (Scanning) எடுத்து இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சென்ன மாநகராட்சியின் இணையதளம் முழுமையாக தமிழல் இல்லாததற்கு யார் காரணம்?
ஆட்சியாளர்களா? அதிகாரிகளா? தொழிற்நுட்ப வல்லுனர்களா?
சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் மாடியில் “தமிழ் வாழ்க” என்று விளம்பரப் பலகை வைத்துவிட்டால் தமிழ் வாழ்ந்துவிடாது.
இதுபோல தமிழ்நாடு அரசின் பல்வேறு இணையதளங்கள் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான சீனா தன்னுடைய அனைத்து நிர்வாக நடைமுறைகளையும் அந்நாட்டின் சீன மொழி மற்றும் நான்கு உள்ளூர் மொழிகளில் செயல்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி சீன நாட்டின் செயல் திட்டங்களையும், செய்திகளையும், சீன மக்களின் கலை பண்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 48 உலக மொழிகளில் இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று.
அதுமட்டுமின்றி தமிழின் வழியாக சீன மொழியை பயிற்றுவிக்கும் திட்டமும் அதில் உள்ளது. சீனா இன்று உலகம் முழுவதும் மிடுக்கோடு நடைபோடுவதற்கு காரணம் என்னவென்று இப்போதாவது நமது இந்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும்.
சீன மக்கள் தன்னையும் தன் மொழியையும் உணர்ந்து செயல்பட்டு உலகுக்கு தான் யார்? என்று நிறுபித்து தன்மானத்தோடு வாழ்கிறார்கள்.
சீன மொழியைப் போன்று மிகத் தொண்மையான மொழியை உடைய தமிழன் தன்மானத்தோடு உலகில் வெற்றிநடைபோட தமிழ்நாடு அரசு தமிழை அரியணை ஏற்றுமா?
19 comments:
This is not a big thing.
what is important is the ability to provide services through the web. It is cost effective to bring this service if done in English.
அனாமத்து பின்னூட்டமிட்ட நண்பரே! இங்கே நடப்பது மக்களாட்சி, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் இங்கு செயல்படுகிறது. அந்த மக்களின் மொழியை புறக்கணிப்பது என்பது தமிழர்களை புறக்கணிப்பதுதான் அதனுடைய பொருள்.
வந்தேறிகள் தமிழ்நாட்டை சுரண்டுவதற்காகவும் தமிழர்களை ஏமாற்றவும்தான் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
தவறு தான்.
தமிழக அரசின் இணைய தளங்களை வடிவமைப்பது முக்கியமாக இரு நிறுவனங்கள்
1. மத்திய அரசின் National Informatics Centre.
2. TCS
அங்கு பணியிலிருப்பவர்களில் பெரும்பாலாணவர்கள் தமிழில் மேல் வெறுப்புள்ளவர்கள் என்பதால் இணையதளத்தில் தமிழை புறக்கணிக்கிறார்கள்
இது திட்டமிடப்பட்டு நடக்கும் ஒன்று.
இது போல் ஒரு திட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டும் வலைத்தளம் வைத்தால் போதும் என்று TCS நிறுவன ஊழியர் (பெயர் ராமன்) கூற, (தமிழிலும் வேண்டும் என்று) நான் எதிர்க்க, ஐ.ஏ.எஸ் அதிகாரி (அவர் வட இந்தியர்) ஆங்கிலத்தில் போதும் என்று முடிவெடுக்க, அதன் பின் ஒரு கட்சி தலைவரிடம் இதை தெரிவித்து, பேராசிரியர் வரை விஷயத்தை கொண்டு சென்று தமிழில் கொண்டு வர வேண்டிய அவல நிலை
இணைய தளங்களை தமிழில் தான் வடிவமைக்க வேண்டும் என்று யாராவது போராடினால் நலம்
http://eservices.tn.gov.in/
http://www.tnrd.gov.in/
//It is cost effective to bring this service if done in English.//
ஒரு மயிறும் கிடையாது
ஏண்டா அனானி, தமிழில் வலைத்தளம் அமைக்க இரண்டு மடங்கு செலவாகுமா, புறம்போக்கு பயலே
உங்கள் பதிவைப் படித்த பின் ஏற்பட்ட
மனக்கிளர்ச்சியை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தேன். நன்றி!
-----------
தமிழ் என்பது அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்று நம் நண்பர் தமிழறிஞர் பெரி. சந்திரா என்றும் வலியுறுத்துவதுபோலத் தமிழை நவீன
கணியுலகிற்கு அழைத்துவந்தாயிற்று. தமிழ்மணம் ( http://tamilmanam.net ) 4000 வலைப்பதிவர்களைக் கொண்டு ஏற்கெனவே இயங்குகிறது. இது 10,000 என்றும் 50,000 என்றும் பதிவர்தொகை
பெருகவேணும். பெருநகர்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களில் இருந்தும் தமிழ்ச் சங்கங்கள் தழைக்கவேணும். தமிழில் எழுதும் பல பதிவுகள் மொக்கைச்சாமிகளின் படைப்பு என்றாலும், தமிழின் விடியல் கணியுலகில் தான். தமிழில் புது அறிவியலை நுழைக்கவும், தமிழரைச் சினிமா, சிற்றரசியல் (petty politics) வளைகளில் இருந்து கடைத்தேற்றவும் கணினிகள் தான் துணை. மதறாஸ் மீடியா ஈழச் செய்திகளை வலையுலகம் இன்றேல் இந்தளவுக்குக் கூடத் தமிழகத்தில்
அறியத்தராது.
இன்று ஒரு பதிவு பார்த்தேன்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html
கருத்தூன்றி வாசிக்கவேண்டிய சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ், தமிழ் என்று அரசியல் பிழைப்பு நடத்தினாலும், ஆக்கபூர்வமான செயல்கள் செய்வதில்லை. வெறும் கட்சிக்கூட்டங்களில் 'தமிழ் வாழ்க' என்று சுலோகன்களால் மட்டுமே
தமிழ் வளரப்போவதில்லை. அரசியல், சினிமா, சின்னத்திரை என்ற திரிகோணப் புள்ளிகளால் மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழர் வாழ்க்கையைக் கட்டிப்போடும் வகையில் வெகுசன ஊடகங்கள் கட்டமைப்புப் பணியில் தீவிரமாக இருக்கின்றன. தமிழ் உணர்வுடையோர் அரசியல் எந்திரத்தைக் கணிப்பக்கம் நகர்த்துதல் தலையாய கடமை, காலத்தின் கட்டாயம்.
வெறும் டிவி, அதில் சினிமா நடிக, நடிகையர் கிசுகிசு என்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் (Panchayath Union) 10-20 கணித்திரைகள், தமிழில் வலையில் பதிவது, பதிவுகள் ஆரம்பிப்பது எப்படி என்று பயிலரங்குகள், பட்டறைகள் தொடங்கினால் பலருக்கும் தமிழில் எழுத ஊக்கம் வரும், அறியாத சொற்கள், மரபுகள், கிளைமொழியியல், வரலாறுகள், பட்டறிவினால் அன்றாட வாழ்க்கையில் தமிழர் கண்டறிந்த விஞ்ஞானம் போன்றவை பதிக்கப்படும். தமிழர் வாழ்ந்தால் நம்முயிர்த் தமிழ் கணினியில் ஏறினால் நம் தலைமுறைக்குப் பின்னரும் தமிழ்ச் சுடரொளி பட்டொளி வீசும்.
(1) தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் ஒரு பாடமாகத் தமிழ் கட்டாயமாக்கப்படல் வேண்டும். தென்றல் இதழில் முனைவர் வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்களின் கருத்துக்கு என்விடை மடல் வெளியானது:
http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html
தமிழில் நன்கு எழுதுவோர் தொகை கூடணும். இப்போது வலைப்பதிவுகளைப் பார்த்தால் இளைஞர் பலருக்கு ர/ற, ன்/ண் (உ-ம்: பெரும்பாண்மை என்று பலர் எழுதுகின்றனர்!!) வேறுபாடுகள், ஒற்று இலக்கணம் ஒன்றுமே தெரிவதில்லை.
(2) தொலைக்காட்சி மாத்திரமல்ல. எல்லா ஊர், நகர் அலுவலகங்கள், நூல்நிலையங்களில் கணினிகள், வேகமான வலையிணைப்பு வசதி தரப்படவேண்டும். தமிழில் எழுதப் பயிற்சிப் பட்டறைகள் நடத்த அரசு கல்லூரிகள் வார இறுதி நாள்களில் கணினி அரங்குகளைத் தரவேண்டும்.
தமிழ்மணத்தின் மூலம் பட்டறைகள் நடத்திய துய்ப்பறிவினால் சொல்கிறேன், கணிஞர்கள் நடத்தினால் பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள்.
(3) இந்நிலை மாறவேண்டும்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html
இணையம் எங்கும் தமிழ்! கணினி எதிலும் தமிழ்!
இந்நிலை தோன்றிடின்
வெல்லத் தமிழ் இனி வெல்லும்!
நிறைய எழுதலாந்தான். இப்போதைக்கு இத்தோடு நிறைவு செய்கிறேன்.
அன்பொடு,
நா. கணேசன்
விரிவான பின்னூட்டமிட்ட திரு. நா.கணேசன் அவர்களுக்கும் அனானிகளுக்கும் நன்றி!
தமிழை அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற ஒவ்வொரு தமிழனும் முயற்சிக்கவேண்டும்.
தமிழை கணினி மொழியாக மாற்ற முடியாது, தமிழ் அறிவியல் மொழியாக இருக்க முடியாது என்ற கருத்தை பலர் கொண்டுள்ளனர்.
பொதுவாக அவர்களை;
தமிழ் மொழியின் இலக்கண வளம், அறிவியல் தன்மை, மொழி வளம் அகியவற்றை அறியாதவர்கள் அல்லது உணராதவர்கள். குறிப்பாக தமிழ் மொழியின் ஆற்றலை புரிந்துகொள்ளாதவர்கள்.
இரண்டாவது தமிழுக்கும் தமிழினத்திற்கும் எதிரானவர்கள்.
மூன்றாவது தமிழினத்தில் உள்ள மெத்தப்படித்த முட்டாள்கள்
என வகைப்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்டவர்களை தெளிவுபடுத்த எதிரிகளை எதிர்க்க அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் தன்னால் இயன்ற பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும்.
“கெடல் எங்கே தமிழர்நலன்
அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க!”
கபாலி கோவிலுல பூணூல்பார்ட்டி தமிழ்லயா மந்திரம் உடுது?
பாரின் ரிட்டண்ட் மொட்ட சிவாஜி தமிழ்லயா பேசராரு?
டீவி டாக் ஷோவுல காம்பியர்ண்ணி பிகர் தமிழ்லயா பேசுது?
எதுக்குடா மதராசு கவுன்சில்லு வெப்பு பேஜுல மட்டும் ஒன்னைப் போல ஆளுங்களுக்கு தமிழு கேக்கூதூ?
இத்துக்கு மேல கேட்டே நீயி விடுதலபுலியான்னு ரெச்பான்சு உட்டு பீட்டர்பத்திரிகல பப்பீளீசு பண்ணுடுவோம். உஜாரா இரு
இதை ஆங்கிலம் தெரிந்தவர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டம் தான் இது... இணையத்தை ஆங்கிலம் தெரிந்தவர் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைப்பவர்களை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை ..
வணக்கம்
தங்கள் பதிவு நன்று.
வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
இந்தி எதிர்ப்புக்கு முதலிடம்!
தமிழ் புதைப்புக்கும் அதே முதலிடம்?!
என்ன துயரம் பாருங்க! காசு பணம் அதிகமாச் செலவானாத்தான் இப்ப என்ன? பொது மக்களுக்குச் சேவை செய்யத்தான செய்யுறோம்?! ஆயிட்டுப் போகுது!
நல்ல பதிவிற்கு என் வாழ்த்துகள். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் இது பற்றி விழிப்புணர்வுடன் கேட்க வேண்டும். நம் தேவையை வலியுறுத்த வேண்டும். நம் உரிமையை நாம்தான் உறுதி செய்தல் வேண்டும். இது செய்யாமல் பிறரைக் குறை கூறுவதில் பயனில்லை. தமிழ் இன்றளவும் ஆட்சி மொழியாக இல்லை என்பதுதான் உண்மை. பெயரளவில்தான் ஆட்சி மொழி. 60-70மில்லியன் மக்கள் இப்படி உரிமை, உணர்வு இழந்து நிற்கும் நிலை மாற வேண்டும். உங்களுடைய இப்பதிவிற்கு சுட்டி தந்து உதவிய நண்பர் கணேசனுக்கு நன்றி.
//what is important is the ability to provide services through the web. It is cost effective to bring this service if done in English.//
1. It is NOT a big thing to provide services through web. It IS important to provide those services in a language that people speak and understand. Anyone can create a website these days. You dont need NIC or TCS to make websites.
2. If it is cost effective why all the big commercial ventures are multilingual? Why governmental services in Europe, China, US and many other DEVELOPED and DEVELOPING nations are multilingual?
What drives people like this anonymous commenter and the likes is well known!
என் பின்னூட்டலை விரிவாக்கிப்
பதிவு ஒன்று எழுதியுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
நன்றி!
நா. கணேசன்
//This is not a big thing.
what is important is the ability to provide services through the web. It is cost effective to bring this service if done in English.//
கருத்துச் சொன்ன நண்பரே,
இந்த வலைத்தளம் தமிழ் மக்களுக்காகவும்தானே?
//இது திட்டமிடப்பட்டு நடக்கும் ஒன்று.
இது போல் ஒரு திட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டும் வலைத்தளம் வைத்தால் போதும் என்று TCS நிறுவன ஊழியர் (பெயர் ராமன்) கூற, (தமிழிலும் வேண்டும் என்று) நான் எதிர்க்க, ஐ.ஏ.எஸ் அதிகாரி (அவர் வட இந்தியர்) ஆங்கிலத்தில் போதும் என்று முடிவெடுக்க, அதன் பின் ஒரு கட்சி தலைவரிடம் இதை தெரிவித்து, பேராசிரியர் வரை விஷயத்தை கொண்டு சென்று தமிழில் கொண்டு வர வேண்டிய அவல நிலை
இணைய தளங்களை தமிழில் தான் வடிவமைக்க வேண்டும் என்று யாராவது போராடினால் நலம்//
இது உண்மையெனில் அவர்களுக்கு கர்நாடக ரக்ஷண வேதிகே பாணி நடவடிக்கையை மேஏகொள்ள வேண்டும்.
//இது போல் ஒரு திட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டும் வலைத்தளம் வைத்தால் போதும் என்று TCS நிறுவன ஊழியர் (பெயர் ராமன்) கூற, //
TCS is just a vendor. If TCS cannot do it in Tamil, the corporation is free to go to some one who can.
//(தமிழிலும் வேண்டும் என்று) நான் எதிர்க்க,//
good job.
// ஐ.ஏ.எஸ் அதிகாரி (அவர் வட இந்தியர்) ஆங்கிலத்தில் போதும் என்று முடிவெடுக்க
//
here is the problem. if the spec does not call for work on Tamil, the vendors will not do it.
//
//It is cost effective to bring this service if done in English.//
ஒரு மயிறும் கிடையாது
//
i did not know you are bald! jokes apart, this is the problem with many. This is not a shouting match where who shouts the most wins. I hate to see no one is willing to discuss issues but only push their opinions.
I thought that all are open for discussions. sorry for putting my opinions on this.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட “சீன மொழி“-யை பயன்படுத்தி சீனா நாடு அறிவியல் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. செயற்கைக்கோள்களுக்கு சீன மொழியிலேயே சமிஞ்சைகளையும் கட்டளைகளை வழங்கிவருகிறது.
சீன மொழியோடு ஒப்பிடுகையில் தமிழ் மொழியில் எழுத்துக்கள் மிகக்குறைவு.
“தமிழில் 246 எழுத்து உள்ளது. அதனால்தான் நாம் அதை கணினியில் பயன்படுத்துவது சிரமமாக உள்ளது.” என்பன போன்ற பல்வேறு வாதங்களும் விதண்டாவாதங்களும் இன்று தவிடுபொடியாகிள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்களைக்கொண்ட சீன மொழியால் அறிவியல் உலகில் அனைத்தும் இயலும் என்கிறபோது தமிழால் முடியாதா?
“நம்புங்கள்!
தமிழால் அனைத்தும் முடியும்”
“செயலாற்றுங்கள்!
அனைத்தையும் தமிழால்”
“தலைநிமிர்ந்து நிற்போம்!
தமிழால் தமிழர்கள் அனைவரும்”
//
சீன மொழியோடு ஒப்பிடுகையில் தமிழ் மொழியில் எழுத்துக்கள் மிகக்குறைவு.
“தமிழில் 246 எழுத்து உள்ளது. அதனால்தான் நாம் அதை கணினியில் பயன்படுத்துவது சிரமமாக உள்ளது.” என்பன போன்ற பல்வேறு வாதங்களும் விதண்டாவாதங்களும் இன்று தவிடுபொடியாகிள்ளது.
//
சீர்மையின் நோக்கம் தமிழ்
எழுத்துக்களைக் குறைப்பததல்ல.
எல்லா 246 எழுத்துக்களும் இருக்கும்.
உங்களுக்குப் பழைய றா, ணா, ளை, ... என்ற 12 எழுத்துக்கள் வடிவம் தெரியுமா? அவை கடினமாக
இருந்ததால் சீர்மைப் படுத்தினோம்.
இப்போது இளைய தலைமுறை
எளிமையாகப் படிக்கிறார்கள்.
அதுபோல, உ/ஊ உயிர்மெய்களை
உடைத்தெழுதுவதால் தமிழ் மிக எளிமையாகும். கற்பித்தல் எளிது.
இப்போது தமிழில் நிறைய வி்ஞ்ஞானம்
ஏற்படும்.
உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்து
எழுதும் சீர்மையைப் படத்தில் பார்க்ககவும். நீங்கள் பபயன்படுத்தும் என்கோடிங்கில் ஏற்கெனவே ஃபாண்டுகள் சீர்மைக்கு உள.
திரட்டி தயாரிக்கணும்.
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
Post a Comment