Thursday, December 18, 2008

தினகரன் நாளேட்டின் தலைப்புச் செய்தியில் நாட்டின் அதி முக்கிய நிகழ்வு

இன்றைய (18.12.2008) நாளேடுகள் அனைத்திலும் “தினகரன்” நாளேடு தவிர நாட்டுக்கு முக்கியமில்லாத செய்திகளே தலைப்புச் செய்தியாக வந்துள்ளது.

“தினகரன்” நாளேடு தவிர பிற நாளேடுகள் நாட்டு மக்களைப் பற்றியோ குறிப்பாக தமிழர்களை பற்றியோ பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன. “தினகரன்” நாளேடு இன்று வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி;


ரஜினிகாந்த-ஐஸ்வர்யாராய் நடிக்கும் “எந்திரன்” படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்

ஷங்கர் இயக்கத்தில் உலக தரத்தில் உருவாகிறது.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் அடுத்த ஆண்டு வெளிவருகிறது
.

(இந்நிகழ்வு தொடர்பான செய்திகளுக்கும் படங்களுக்கும் மூன்று பக்கங்கள் இந்நாளேட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சன் நெட்வொர்க்கின் அனைத்து ஊடங்களிலும் இன்று இதுதான் தலைப்புச் செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.)

பிற நாளேடுகள் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற தலைப்புச் செய்திகள்:

தினத் தந்தி

“தீவிரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைக்கு 2 மசோதாக்கள்
பாராளுமன்றத்தில் நிறைவேறியது”

“மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு“

“சிங்கள ராணுவத்துக்கு பலத்த உயிர் சேதம்”

தினமணி

“மாநில அரசுகளின் உரிமைகளில் என்.ஐ.ஏ தலையிடாது”
“2 மசோதக்களை தாக்கல் செய்து சிதம்பரம் உறுதிமொழி”

தினமலர்

“பொடா சட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சட்டம்”
அமைச்சர் சிதம்பரம் விளக்கம்

“புதிய சட்டத்திற்கு பா.ஜ., ஆதரவு
காலதாமதம் என்று குற்றச்சாட்டு”


தமிழ் ஓசை, ஜனசக்தி, தீக்கதிர், விடுதலை போன்ற உதவாக்கரை நாளேடுகளிலும் இதே கதைதான்.

முரசொலி - கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றில் தலைப்புச் செய்தி என்னவென்று தெரியவில்லை.

.... !!! ... ???

நாள்தோரும் “தினகரன்” நாளேடு படித்தும்
சன் குழமத்தின் தொலைக்காட்சிகளைப் பார்த்தும்
அவர்களை மட்டும் வாழவைத்து...
தமிழக மக்கள் அனைவரும்
மேலும்... மேலும்..
நாசமாய் போக என் வாழ்த்துக்கள்!

-காட்டுமோட்டான்

8 comments:

said...

இதுவாச்சும் பரவாயில்ல,
(நடிகை) நளினிக்கு ரெட்ட கொழந்த என்பதை தலைப்புச்சேதியாகச் சொன்னது தான் தினத்தந்தி.
ஆன்ங்.. அதனால தான் அது தமிழின் நம்பர் ஒன் நாளிதழு.

said...

:-)

Anonymous said...

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தினகரன் வாங்காமல் இருக்கலாமே

போங்க சார் வெட்டி கதை பேசாம வேலையை பாருங்க

Anonymous said...

உங்களுக்கு பிடித்த செய்திகள் தான் வெளியிடவேண்டும் என்றால் தனியாக செய்தி தாள் போடுங்க. அடுத்தவனை குத்தம் சொல்லி புழைப்பை ஓட்டுவது எல்லாம் தூ தூ

said...

பார்த்தாயா உடன் பிறப்பே, என் பேரன்மார்கள் திரை படம் தயாரிக்க இறங்கியதும் பார்ப்பன சக்திகள் குரைக்கின்றன.

சங்கர், ரஜனி காந்த் என்ற பார்பானர்கள் இருக்கும் திரைப்படம் நமக்கு எதிரி அல்ல, ஜெயலலிதா,க்கு ஆதரவு அளிக்கும் பார்ப்பனர்கள் மட்டுமே நமது எதிரிகள். இது புரியாமல் வலை பதிவர்கள் எது ஏதோ எழுதி தீர்க்கின்றனர்.

எனவே மந்திரிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இந்திரன் படத்தை முதல் காட்சி பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் உடன் பிறப்பே.

முதல் அமைச்சர், மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்குபவன் என்ற முறையில் இந்த படத்தி ப்ரிவியூ காட்சிக்கு தவறாமல் கலந்து கொள்வேன் உடன் பிறப்பே.

said...

பாபு அவர்களுக்கு,

இந்தப் பதிவு “தினகரன்“ நாளிதழுக்கு எதிரானது அல்ல. அதனுடைய போக்கிற்கும் கருத்திற்கும் எதிரானது.

said...

பேர் சொல்லா பிள்ளைகளுக்கு, வணக்கம்.

எனக்குப் பிடித்தச் செய்திகளைத்தான் வெளியிடவேண்டும் என்று நான் தினகரனை கேட்கவில்லை.

காசு கொடுத்து நாளிதழ் வாங்கி படிக்கும் எனக்கு அவர்கள் காசு சம்பாதிக்க ஏதுவான செய்திகளை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதைத்தான் எதிர்க்கிறேன்.

அடுத்தவனை குற்றம் சொல்லி பிழைப்பை ஓட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை. அடுத்தவன் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவதும் அவனுடைய தவறால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் ஆராய்வது நாட்டுமக்களின் கடமை.

ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும் தகவல்களும் நாட்டுமக்களின் வாழ்வியல் முறைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் இவர்களின் செயல்பாடுகளே நாட்டின் அதிமுக்கிய செயல்பாடுகளாக தலைப்புச் செய்தியில் வெளியிடுவதைத்தான் எதிர்க்கிறேன்.

said...

தமிழக முதல்வர் கலைஞர் எப்போதுமே பார்ப்பனர்களுக்கோ பார்ப்பனியத்திற்கோ எதிரானவர் அல்ல...

தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மை என்றால் அவர்களை அரவணைத்துச் செல்வார்...

தனக்கும் தன் குடும்பத்திற்கும் தீமை என்றால் அவர்களை அவாள் இவாள் என்று ஏதாவது காரி உமிழ்வார்...

பார்ப்பனர்கள் ஒருபோதும் கலைஞரைப் பார்த்து பயப்படமாட்டார்கள். ஏனெனில் அவரை எப்படி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்...

உண்மையான பெரியார் தொண்டர்கள்தான் இவர்மீது வருத்தத்தில் இருக்கிறார்களே தவிர, பார்ப்பனர்களுக்கு இவர்மீது கோபமே இல்லை. கோபப்படுவது போல் நடிப்பார்கள்.

பார்ப்பனர்களின் உண்மையான எதிரிகள் உண்மையான பெரியார் தொண்டர்களும், பொதுவுடமை சிந்தனையாளர்களும் தான்.