Thursday, October 2, 2008

ஏண்டா! நீங்களெல்லாம் அரசியலுக்கு வந்து தமிழன் தாலிய அருக்கறிங்க?

காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.வீ.தங்கபாலு 02.10.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க சில கட்சிகள் முயல்வதாகவும்,

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவவில்லை என்றும்,

இலங்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் ஆதரிக்கவில்லை என்றும்,

இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.”

தமிழ்நாடு காங்கிரசு கட்சி பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முட்டாள்களின் கைக்கு மாறியதும் அல்லது முட்டாள்களுக்கு மட்டுமே தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிந்ததே.

அந்த வரிசையில் தற்போது கே.வீ.தங்கபாலுவிற்கு அந்தப்பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக நியமிக்கப்படும் வரை ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் தான்உண்டு தன் வேலைஉண்டு என்று கல்வி வியாபாரத்தை மட்டுமே பார்த்துவந்தார்।
தற்போது அவரை தலைவராக நியமித்ததால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டவர்போல் உளரிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் விடுதலைப் புலிகள் வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத்தின் கூட்டுபடை முகாம் மீது நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் இருவர் படுகாயமுற்றதையும் இலங்கையில் 250-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று இலங்கை தூதரக அதிகாரி அறிவித்ததையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இச்செய்தி தமிழக மக்கள் அனைவரும் அறிந்த பழைய செய்தி.

அதுபோல் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக்கொன்றதும் இந்திய அரசு அதை வேடிக்கைப் பார்ப்பதும் தமிழக அரசின் கையாளாகத் தனமும் தமிழர்கள் அறிந்ததே!

திரு. தங்கபாலு அவர்களே! உங்களுக்குத் தெரிந்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். அரசியல் அறிவோ, பொது அறிவோ குறைந்த பட்சம் செய்தித்தாள் அறிவோ இன்றி அரசியல் பேசி தமிழர்களின் தாலியை அருக்காதீர்கள்.

10 comments:

said...

arumaiyana karutthu..

said...

இதனைப் படிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் வாழப்பாடி ராமமூர்த்தி அணியினர் சென்னை பனகல் பூங்காவில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய பெண்(!!) பேச்சாளர் ஒருவர் கேட்ட கேள்வி நினைவிற்கு வருகிறது.
அவர் கேட்ட கேள்வி:
யார் இந்த தங்கபாலு? தங்கபாலாம் தங்க பால்,, லவ****க பால்..

லவ****க பால் = ??

said...

இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.”//

இவ்வளவுநாளும் தாக்கப்பட்டது இந்திய மீனவர்கள் இல்லையா ? அப்டீன்னா சரி :)

said...

http://sivasinnapodi1955.blogspot.com/

said...

Congressman=Comedian

said...

தங்க பாலு எல்லாம் ஒரு ஆளூ..தூ....

said...

தங்கபாலு ஒரு ஆளா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சனை.

தற்போது இந்தியாவை ஆளும் கட்சி காங்கிரசு; தமிழ்நாட்டில் தற்போதுள்ள தி.மு.க. அரசும் இந்தக்கட்சியை நம்பித்தான் ஆட்சியல் உள்ளது.

அப்படிப்பட்ட கட்சிக்கு இப்படிப்பட்ட அடிமுட்டாள்கள் தொடர்ந்து தலைவராக நியமிக்கப்படுவதுதான் விந்தையாக உள்ளது.

said...

நல்ல தெலுங்கு டப்பிங் பட தலைப்பு.
உள்ளே நியாயமான கேள்விகள்...

"இந்த அரசியல் வாதிகளே இப்படித்தாங்க... " என்று ஒட்டு போடும் ஒட்டு எந்திரம்.
2020-யில் வல்லரசாகிவிடும் இந்தியா...
2011-யில் பத்து பேர் முதலமைச்சராக இருப்பார்கள்...
இது தாண்டா இந்தியா...
இந்த தலைப்பு எப்படி இருக்கு???

said...

// அப்படிப்பட்ட கட்சிக்கு இப்படிப்பட்ட அடிமுட்டாள்கள் தொடர்ந்து தலைவராக நியமிக்கப்படுவதுதான் விந்தையாக உள்ளது.//
இந்த முட்டாள்களால் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இல்லாதொழிந்தால் தமிழருக்கு நல்லது தானே. அதனால் மேலிடத்துக்கு நன்றி சொல்லுவோம். இதுகள் பண்ணும் கிறுக்குத்தனங்களை அம்பலப் படுத்துவோம்.

said...

காங்கிரஸ் என்றில்லை அகில இந்திய கட்சிகள் அனைத்துமே தமிழர் விரோதிகள்தான். நாம் கண்டிக்க வேண்டியது அவர்களுக்கு பல்லக்குத் தூக்கும் நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளைத்தான்.

தமிழ், தமிழினம், தமிழர்நிலம், தமிழர் உரிமை, தமிழர் முன்னேற்றம் தொடர்பாக நல்ல செயல்திட்டத்துடன் கூடிய ஒரு கொள்கைக்கூட்டணி தமிழ்நாட்டில் உருவாகவேண்டும்.