Tuesday, October 7, 2008

குழப்பமும் வேண்டாம்! குழப்பவும் வேண்டாம்!-தமிழீழமே தீர்வு

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் இன்று ஈழத்தமிழர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

தாய்த்தமிழக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழகத்தில் சூழல் நிலவுகிறது.

இந்தச்சூழலை பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பாகவும் நிரந்தர தீர்வுகாண தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும்.

ஈழச்சிக்கலுக்கு நிரந்த தீர்வு “தமிழீழ தனிநாடுதான்“ என்பது இங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கடந்தகால நிகழ்கால நிலைப்பாடு.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் போன்ற இயக்கங்கள் தமிழீழ சிக்கலுக்கு நிரந்தரத்தீர்வு “தமிழீழ தனி நாடுதான் ஒரே தீர்வு” என்ற நிலைப்பாட்டில் இப்போதும் உள்ளன. திராவிடர் கழகமும் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கும் என நமபுகிறோம்.

எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அ.திமு.க.வின் நிலைப்பாடு தனிநாடுதான் தீர்வு என்றிருந்தார். தற்போது செயலலிதா அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

புதியதாக ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய பொதுவுடமை கட்சியினர் “அனைவருக்கும் சமமான உரிமை வழங்கும் கூட்டாட்சி” மலரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

காங்கிரசு, பா.ச.க. போன்ற கட்சிகளின் தற்போதயை நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் ஈழ பிரச்சனை தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை என்ன என்பதை விளக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் 06.10.2008 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலவரும் தி.மு.க.வின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் பேசும்போது,

......... ............ ....... ........ “இலங்கையில் காந்தியடிகளைப் போன்ற உருவம், ஆனால் பெரியாரை போன்ற உள்ளம் கொண்ட செல்வா தொடங்கியதுதான் உரிமை போராட்டம். அதற்கான ஆதரவு கேட்டு தமிழகத்திற்கு வந்தார். இங்கு வந்த போது அவரோடு அமிர்தலிங்கமும் வந்தார்.

இவர்கள் எல்லாம் இன்று இல்லை. இவர்கள் இல்லாமல் போனதற்கான காரணங்களை நான் ஆராய விரும்பவும் இல்லை. அதற்காக இப்போது கண்ணீர் விட்டு புண்ணியமும் இல்லை.

செல்வா காலத்திற்கு பிறகு அங்கு இளைஞர்கள் தோன்றினார்கள். அந்த இளைஞர்கள்தான் சிறைச்சாலையிலே உயிர்நீத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தியாகம் அவர்கள் நினைத்த விடுதலை உணர்வு இன்றளவும் பட்டுப்போகாமல் இலங்கையில் இருக்கிறது.

ஆனால் முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீர வேண்டுமா? இது விவாதத்திற்குரிய விஷயம். நெடுநாளாக விவாதிக்கப்படுகிறது.” . ......... ......... ........ ........
என்று பேசியுள்ளார்.

கடந்த காலங்களில் தி.மு.க.வின் நிலைப்பாடும் கலைஞரின் நிலைப்பாடும் ஈழத்தமிழர்களின் இன்னல் தீர ஒரே வழி “தமிழீழ தனிநாடு மட்டுமே” என்ற நிலைப்பாடுதான். இந்த நிலைப்பாட்டில் தற்போது குழப்பம் ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

மரியாதைக்குரிய கலைஞர் அவர்களே! வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்துவிடாதீர்கள். தமிழீழ சிக்கலுக்கு “தமிழீழ தனிநாடு” மட்டுமே நிரந்தரத்தீர்வு என்ற இலக்கை நோக்கி மட்டுமே உங்கள் பார்வையை செலுத்துங்கள்... அதற்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுங்கள்... தமிழீழ அதரவு சக்திகள் அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஓரணியில் திரட்டுங்கள்...
“தமிழீழ தனி நாடே” ஒரே தீர்வு என்று தாய்த் தமிழகம் ஒரே குரலாக ஒலிக்கட்டும்...

10 comments:

said...

Migavum nandraaga eluthareenga.

Ayya Periyaarin Aganda Thamilnaadu viruppam patri neengal ethavathu sollungal. He wanted all Tamils under one umbrella and rule. Please check with Suba.Veerapandian.

I feel the self rule with dignity is the best option, provided there is truce all over. Norway is working very hard.

Could you please detail out all the Tamil political democratic parties that are working (or earlier) in SriLanka for this. Would caste or religion be a matter of principle there?

Neengal ippothu angu ulla nilamai kurithu pugaipadam (Cocoa Cola sponsored games ellam vendam) podungal.

Nandrigal.

said...

தமிழர் பார்வை நன்றாக ஒளி(லி)த்திருக்கிறது.
ஆட்சியாளரின் செவிகளுக்கு ஒலிக்கட்டும்....!
இணைவோம் தமிழர்களாய்!!
இயற்றுவோம் தமிழால்!!!

Anonymous said...

தங்களின் இப்படிவை ஈழவர் குரல் இணையத்தில் பதிந்துள்ளோம்.

பார்க்கவும்:
www.eelavarkural.com


நன்றி!!!

Anonymous said...

ஒவ்வொரு தமிழனும் தமிழீழ தனி நாடு அமைய தம்மால் இயன்ற பணிகளைச் செய்வது நமது கடமை

Anonymous said...

ஒவ்வொரு தமிழனும் தமிழீழ தனி நாடு அமைய தம்மால் இயன்ற பணிகளைச் செய்வது நமது கடமை

Anonymous said...

தமிழனில்லா தரணியில்லை- ஆனால்
அவனுக்கென்று ஒரு தேசம் இல்லை!

தமிழ் ஈழம் ஒன்றே தீர்வெனக்கொள்வோம் !

அதை வெல்ல உலகத்தமிழர் அனைவரும் சூளுரைப்போம் !!

Anonymous said...

thamilnaadu irukirathu thamilargalukku? athu yen thani naadu aaga koodathu? athanodu thamil eelam serthaal.... aganda thamilnaadu..

ippothaiya arasiyal sattam idam kodukkathu. irunthaalum... ninaipathu thavarillai. enna raanuvam mattum vendum. athu angirunthu training varum.

israel mathiri oru passport ella thamilarukkum. visa vendam.

oru sinthanai.

Anonymous said...

இரமேசு மற்றும் பேர் சொல்லாமல் பின்னுட்டமிட்வருக்கு,

வணக்கம். உங்கள் இருவரின் கருத்துக்களும் ஒன்றாக உள்ளது.

ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், தமிழகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் அடிப்படையில் வெவ்வாறானவை.

ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைக்காக அவர்கள்தான் போராட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள் களத்தில் நின்று போராடமுடியாது. இது இருவருக்குமே நல்லதல்ல.


தமிழ்நாட்டு தமிழர்கள் தங்கள் அரசியலை தீர்மானித்துக்கொள்வார்கள். அதில் ஈழத்தமிழர்கள் தலையிடக் கூடாது.

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக தமிழக தமிழர்கள் ஆதரவு கொடுக்கலாம். நிதி உதவி, பொருள் உதவி போன்றவை செய்யலாம். தமிழீழம் ஏன் வேண்டும்? என்பதற்காகவும் அதற்கு ஆதரவாகவும் கருத்துருவாக்க பணியில் ஈடுபடலாம்.

இந்த அகண்ட தமிழகம், அகண்ட பாரதம், உலகம் ஒரே நாடு போன்றவை தேவையில்லாத முட்டாள்தனமான சிந்தனை.

உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலையைப் பற்றி மட்டும் இப்போது பேசுவது நல்லது. அந்த இலக்கு நோக்கிய பயனத்தை மட்டும் தமிழர்கள் தொடரவேண்டும்.

Anonymous said...

தமிழீழ தனி நாடு புலிகள் இல்லாத தமிழ்நாடு சாத்தியமா?

அவர்களின் உள்குத்து (கருணா) இதை கேட்க வைக்கிறது.

மேலும், அவர்கள் (தமிழ் ஈழம் தமிழர்களின் - முஸ்லீம், கிறிஸ்டியன் தவிர) வெளிநாட்டு உறவினர்களிடம் வாங்கும் மொய் (டாக்ஸ்) தவறா, தேவையா?

போதை மருந்து கடத்துவது நிருத்தமாட்டார்களா?

மஹாத்மா காந்தி காட்டிய வழி அங்கு செல்லாதா?

- உண்மை தமிழன்

said...

மொட்டை கடிதம் எழுதுபவர்களுக்கு பதில் எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.

இது போன்ற புளித்துப்போன பல்லவிகளை முதலில் நிறுத்துங்கள்.

உலகத்தமிழர்களின் ஒரே இலக்கு தமிழீழமாக இருக்கட்டும். அதை நோக்கி தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக நடைபோடுவோம்.