Friday, August 29, 2008

போவாய்... போவாய்... நீ நாசமாய் போவாய்...

எழுத்தையும் பேச்சையும்
மூலதனமாக்கி...
செய்யக்கூடாத அத்தனை
இழிவுகளையும் செய்து

மிஞ்சியவர்களின் காலில் விழுந்து...
கெஞ்சியவர்களை காலால் மிதித்து...

கட்டிய மனைவி முதல்
பெற்ற பிள்ளை வரை
யாருக்குமே நம்பகமாக இல்லாமல்
தான்... தான்... தான்...
தான்தான்
என்று மட்டுமே வாழ்ந்து...

வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம்
தமிழினத்தை
அடகுவைத்து
வஞ்சித்து
காட்டிக்கொடுத்து

பிரித்தாளும்
சூட்சி செய்து
ஆட்சி அதிகார போதையில்
மிதந்து
தள்ளாடி
தட்டித் தடுமாறும் நிலையிலும்...

எந்தத் துறையிலும்
எந்த நிலையிலும்
எப்போதும்
தமிழனின் ஆளுமையை
விரும்பாத
சகிக்காதா
ஏற்றுக்கொள்ளாத
தமிழினத் துரோகியே...

தமிழினத்திற்காக
உண்மையாக உழைக்கும்
நெடுமாறன் ஐயாவை
இழிவுபடுத்தும் இழிமகனே...

போவாய்...
போவாய்...
நீ நாசமாய் போவாய்...

தமிழ்மகன்

Sunday, August 24, 2008

‘குடிஅரசு’ - 27 தொகுதிகள் - முன்பதிவுத் திட்டம்! - பதிவுக்கு முந்துங்கள்!

ஆய்வாளர்கள், தமிழின உணர்வாளர்களின் நீண்டகால விருப்பம் செயல்வடிவம் பெறுகிறது. பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் முழுமையாகத் திரட்டி சிதைக்காமல் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் பெரியார் திராவிடர் கழகம் பெருமையுடன் ஒப்பளிக்கிறது!

தமிழ்நாட்டின் வரலாற்றோடு பிணைந்து நிற்கும் பெரியாரின் ‘எழுத்தும் பேச்சும்’ கால வரிசைப்படி தொகுப்புகளாக, உங்கள் கரங்களில் தவழ இருக்கிறது.

தமிழகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய பெரியாரின் புரட்சிகர பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டில், புதைந்து கிடந்த பெரியார் சிந்தனைகளை தேடிப் பிடித்து, 1925 - முதல் 1938- முடிய சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 - தொகுதிகளாக, வெளிவர இருக்கின்றன.

ஒவ்வொரு தொகுதியும் 400 - பக்கங்களுக்கு மேல்!ரூ.5400 - விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ.3500-க்கே உங்களுக்கு கிடைக்கும்.

ரூ.3500 - முன் பணம் அனுப்பி, முன் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி, ஆகஸ்ட் 31. வரைவோலையாகவோ (டிராப்ட்), பணவிடை வழியாகவோ (மணியார்டர்) மட்டும் அனுப்ப வேண்டும். காசோலைகள் (செக்) அனுப்ப வேண்டாம்.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி - 27 தொகுதிகளும் வெளி வருகின்றன. ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இடம் பெற வேண்டிய அரிய தொகுப்பு! இந்தத் தொகுதிகளை நீங்கள் விரும்பும் நூலகத்துக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும், ஆய்வு நடுவங்களுக்கும் நினைவுப் பரிசுகளாக நீங்கள் வழங்கி, என்றென்றும் நிலைக்கும் புகழுக்குரிய கடமையை ஆற்றலாம்.

ஏற்கனவே கழகத்தால் வெளியிடப்பட்ட மூன்று தொகுதிகளும், பல புதிய சேர்க்கைகளோடு, கூடுதல் பக்கங்களில் இப்போது, இத் தொகுதிகளோடு இணைத்து, மீண்டும் வெளியிடப்படுகிறது.

தமிழின உணர்வாளர்களே! பெரியாரியலாளர்களே! சமூக மாற்றத்துக்கு உழைக்கும் தோழர்களே! முன்பணம் செலுத்தி, உங்கள் தொகுதிளை உறுதி செய்து கொள்ளுங்கள்!

வரைவோலையாகவோ (D.D), பணவிடையாகவோ (எம்.ஓ.) அனுப்பலாம். ‘T.S. Mani’ என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலைகளாக இருத்தல் வேண்டும். காசோலை (Cheque) ஏற்க இயலாது.

- பெரியார் திராவிடர் கழகம் -

Friday, August 22, 2008

தமிழக அரசே! தந்தை பெரியாரின் நூல்களை அரசுடமையாக்கு!

வாழ்நாளெல்லாம் தமிழினத்தின் ஏற்றத்திற்காக உழைத்த தலைவர் தந்தை பெரியார். அவரின் எழுத்தும் பேச்சும் கருத்தும் செயல்பாடுகள் அனைத்தும் அவரின் சுயசிந்தனை. தன்னுடைய வாரிசாக தன்னுடைய கொள்கைகளை தமிழ்நாட்டிற்கு விட்டுச் சென்றவர் தந்தை பெரியார்.

இப்படிப்பட்ட மாபெரும் தலைவனின் கருத்துகளை “அறிவுசார் சொத்துரிமை“ என்ற பெயரில் தன் குடும்பச் சொத்தாக மாற்ற துடிக்கிறார் பெரியாரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் கந்து வட்டிக்காரர் வீரமணி அவர்கள்.

இதை தடுத்து நிறுத்துவது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். யார் யாருடைய நூல்களை எல்லாம் அரசுடமையாக்கும் தமிழக அரசு தமிழினத்திற்காக உண்மையாக உழைத்த தந்தை பெரியாரின் நூல்களை இதுவரை அரசுடமையாக்காதது வெட்கக்கேடு.

பெரியாரின் கைபிடித்து நடந்தோம் கால்பிடித்து நடந்தோம் என கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா?

புற்றுநோயை வென்ற மாவீரன்!2008 ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 10 கி.மீ. நீச்சல் போட்டியில் 1 மணி 51 நிமிடம் 51.6 விநாடிகளில் இலக்கை எட்டி நெதர்லாந்து வீரர் வான் டெர் வீச்டென் மார்டீன் தங்கம் வென்றார்.

27 வயதாகும் வீச்டென் மார்டீனுக்கு இரத்தப் புற்றுநோய் இருந்தது 2001-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கடுமையாகப் போராடி 2003-ல் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்றார்.

அவரது விடாமுயற்சியாலும், தளராத மனத்தாலும் இந்த ஆண்டு செவில்லேவில் நடைபெற்ற 25 கி.மீ. போட்டியில் வென்று உலக சாம்பியன் ஆனார்.

வெற்றிக்குக் காரணம் மருத்துவமனையில் கடும் அவதியில் இருக்கும்போது, அடுத்த நாள் அல்லது வாரம் குறித்து சிந்திக்கத் தோன்றாது. அடுத்த மணி நேரம் குறித்தே சிந்திக்கத் தோன்றும். இது எனக்குப் பாடமாக அமைந்தது. இதையே இப்போட்டியிலும் கடைபிடித்தேன்” என்றார்.

ஆலந்தில் உள்ள மிகப் பெரிய ஏரியில் 2004-ல் வீச்டென் நீந்தி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக சுமார் ரூ.30 லட்சம் சேகரித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 13, 2008

மாற்று எரிபொருளால் மின்சாரம் தயாரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும்-மருத்துவர் புகழேந்தி

நம் நாட்டின் மின்உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு மூன்று சதவிகிதம்தான். புதிய அணுஉலைகள் வந்தால் இது ஒன்பது சதவிகிதமாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. அவ்வளவுதான்.

இதற்காக மக்களை வாட்டி வதைக்கக் கூடாது. அதோடு, கல்பாக்கம் மின்சாரத்தால் அந்தப் பகுதி மக்களுக்கும் பயனில்லை. எனவே மாற்று எரிபொருளால் மின்சாரம் தயாரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தால் வரப்போகும் அணுஉலைகளில் பல தமிழ்நாட்டில்தான் அமைகின்றன என்ற அபாயத்தை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன்'' என குமுறலோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி

விரிவான கட்டுரை: குமுதம் ரிப்போர்டர், 17.08.2008

Monday, August 11, 2008

பாடகர் டி.எம்.சௌந்திரராசன்-பி.சுசீலா ஆகியோர் தமிழர்களா?

பிரபல பாடகர் டி.எம்.சௌந்திரராசன் மற்றும் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு பாராட்டு விழா அன்மையில் மதுரையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பாராட்டப்படவேண்டியவர்கள் பாராட்டப்பட்டுள்ளனர். மிக்க மகிழ்ச்சி.


இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர் அவர்கள் டி.எம்.சௌந்திரராசன் அவர்களை ஒரு “தமிழனுக்கு” நடைபெறும் பாராட்டுவிழாவில் தமிழனாகிய நான் தலைமையேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று வளிந்து குறிப்பிட்டார்.


திரு. டி.எம். சௌந்திரராசன் அவர்கள் ஒரு சௌராஷ்டிரர் என்பதும், நடைபெற்ற பாராட்டுவிழாவில் சௌராஷ்டிர சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டதும், அந்தச் சமுதாய மக்களுக்கு சிறப்பான வரவேற்பும், தனி இருக்கைகள் வழங்கப்பட்டன என்பதும் அனைவரும் அறிந்ததே.


தற்போது தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயம் சௌராஷ்டிர மக்கள் தமிழர்களா? என்பதுதான். அவர்களின் தாய்மொழி தமிழா? சௌராஷ்டிரமா?


தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால், அண்டை மாநிலங்களில் அண்டை நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் யார்?


தனக்கு ஒத்துப்போகும் வகையில் தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதுமே தவறான அடையாளங்களையும், தவறான தலைமையையும் அடையாளங்காட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் நடிகர் இரசினிகாந்து அவர்களையே தமிழர் என்று அடையாளம் காட்டியதால் தமிழர்களுக்கு இந்த ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளது.


தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பாடல்களை மிகச்சிறப்பாக பாடிய டி.எம்.சௌந்திரராசன் அவர்களையும் பி.சுசீலா அவர்களையும் தமிழர்கள் அனைவரும் மனதார, உளமார, உண்மையா பாராட்டுகிறோம், போற்றுகிறோம், மதிக்கிறோம். அதற்காக அவர்களை தமிழர்களாக ஏற்க................. முடியுமா?

அணுமின் நிலையங்கள் தனியார்மயம்

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை சிஐஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 10 முக்கிய அம்சங்களை சிஐஐ வலியுறுத்தியுள்ளது.

சிவிலியன்களைக் கட்டுப்படுத்தும் அணு சக்தி விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். தனியார் பங்கேற்கும் அணு மின் நிலையங்களை அரசு மேற்பார்வையிடும் வகையில் அது சர்வதேச விதிமுறைகளுக்கு உள்பட்டதாய் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
விமான எரிபொருளுக்கு 4 சதவீத வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் விமான கட்டணங்கள் கணிசமாகக் குறையும். பெரும்பாலான விமான நிறுவனங்களின் வருமானத்தில் 40 சதவீதம் எரிபொருளுக்கே செலவாகிறது. வழக்கமான பொருளைப் போல விமான பெட்ரோலுக்கும் 4 சத உற்பத்த வரி விதிக்கப்பட வேண்டும்.

அரசு மேற்கொள்ளும் திட்டப் பணிகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அத்துடன் அதில் ஏற்படும் கால தாமதத்துக்கான விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 50,000 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்க்க திட்டக்குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மிகப்பெரிய துறைமுகங்களை நிறுவனங்களாக்க வேண்டும்.
இதன் மூலம் வர்த்தகரீதியில் அவை செயலாற்ற வழியேற்படும். அத்துடன் திட்டமிட்டு செயல்படுவதில் உள்ள இடையூறுகள் நீங்கும்.

மின் திட்டங்களைப் பொருத்த மட்டில் அரசு ஒரே சீரான கொள்கை அறிவிக்க வேண்டும்.

நில ஆர்ஜிதம், தண்ணீர் ஆதாரம், எரிபொருள், சுற்றுச் சூழல், வனம் உள்ளிட்டவற்றில் எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பெரிய மின் திட்டங்கள் மேற்கொள்வதற்காக அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து திட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி தினமணி, 11.08.2008

Thursday, August 7, 2008

ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள்

நாத்திகம் இதழின் 50-வது ஆண்டு விழா கடந்த 03.08.2008 அன்று சென்னையில் நடைபெற்றது இவ்விழாவில் மருத்துவர் இராமதாசு பேசியதாவது:

நமது மண், ஆறுகள், குளங்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து வருகிறோம். நமது இளைஞர்கள் மது, திரைப்படங்களால் சீரழிந்து வருகின்றனர்.

இதை எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் நாமும் இல்லை. அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.

இதை மாற்றவில்லையெனில், நமது முன்னோர்கள், தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விடும். இல்லையெனில், தமிழர்களுக்கு விமோசனமே இல்லை.

தமிழகத்தில் 4 தலைமுறைக்கு இளைஞர்கள் பலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஓர் ஆய்வு தெரி விக்கிறது.

தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வறட்டுக் கூச் சலாகத்தான் உள்ளது. சிற்றூர்களில் கூட பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை உள்ளது.

அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில், தமிழ்வழியில் தரமான, கட்டாய, சமச்சீரான கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை முதல் கடலூர் வரை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங்கிக் குவிக்கின்றனர். இந்த மனை விற்பனை தமிழகம் முழுவதும் இனி தொடரும்.

நமது மண், மொழியை மட்டுமன்றி மீனவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதையெல்லாம் மாற்றுவதற்கு வேறு என்ன வழி என்று தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இதற்கான மாற்று வழியை தலைவர்கள் கூறினால் அதை பின்பற்றலாம்.

ஒரு காலத்தில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசிப் பேசி அவர்களின் தொண்டை கூட வறண்டுவிட்டது.
இதற்காகப் போடாத மாநாடுகள் இல்லை.

ஆனால், இன்று ஒரு பள்ளியோ அல்லது மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்றால் கூட தில்லிக்கு தான் கோப்பு களைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநில சுயாட்சி அந்த அளவுக்கு உள்ளது. இதை யோசிக்க வேண்டும்.

எனவே, இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத் துள்ள தலைவர்கள் கூடிப் பேசி வழிகாட்ட வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாசு.

நன்றி: தினமணி, 04.08.2008.

Saturday, August 2, 2008

இரஜினி கர்நாடகத்தில் இருந்து பிழைக்க வந்தவர், அவருக்குப் பிழைப்புதான் முக்கியம் - விஜய டி.இராஜேந்தர்

அன்று தமிழர்களுக்கு மத்தியிலே தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள நினைத்தார். இன்றைக்குக் கன்னட அமைப்புகளுக்குப் பயந்து கொண்டு வருத்தம் தெரிவிப்பதாகப் பேசி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் ஜீரோவாக.

இவர் பேசிய பேச்சால்தான் கர்நாடகத்திலே படத்தைத் திரையிட பிரச்னை என்றால் அந்த ஏரியாவின் விலை என்னவோ அந்த நஷ்டத்தை ஈடாகத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டு தமிழ்த் திரைப்பட உலகின் மூலம் போராட வேண்டியதுதானே?

மாறாக, இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் கர்நாடகத்தில் இருந்து பிழைக்க வந்தவர். அவருக்குப் பிழைப்புதான் முக்கியம்.

நன்றி: தினமணி

ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இரஜினி அவமானப்படுத்திவிட்டார்-நடிகர் சத்யராஜ்

செய்தி கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இப்படி ஒரு பல்டி அவருக்குத் தேவைதானா? ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இரஜினி அவமானப்படுத்திவிட்டார்.

எனக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் கர்நாடகத்தில் அந்தப் படம் ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டம் அடைந்திருக்குமோ அதை என் சம்பளத்தில் கொடுத்திருப்பேன். அவர் தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைத்துவிட்டார் போலும்.

நன்றி: தினமணி

சுய லாபத்துக்காகத் தமிழகப் பிரச்னையில் விட்டுக் கொடுத்து விட்டாரா-நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்

ஒகேனக்கல் பிரச்னையில் பேசிய பேச்சுக்காகப் பாடம் கற்றுக்கொண்டேன் என்று இரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அவர் என்ன அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கு பேசிய பேச்சுக்காக அவர் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது தவறு என்று கூற வருகிறாரா? அல்லது குடி தண்ணீருக்காக தவித்துக் கொண்டு இருக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களுக்காகப் பேசியது தவறு என்று கூறுகிறாரா?

எனவே அவர் வருத்தம் தெரிவித்தது பற்றி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். எனக்கு இரஜினியுடன் தனிப்பட்ட பிரச்னை எதுவும் கிடையாது. இருந்தாலும் இரஜினியின் விளக்கம் காரணமாக திரைப்படத் துறையினர் மத்தியிலும் எழுந்துள்ள கருத்துகளைத் தொடர்ந்தே ரஜினியிடம் விளக்கம் கேட்க விரும்புகிறேன்.

சுய லாபத்துக்காகத் தமிழகப் பிரச்னையில் விட்டுக் கொடுத்து விட்டாரா என்றே கேட்க விரும்புகிறேன்.

நன்றி: தினமணி