Friday, August 22, 2008

புற்றுநோயை வென்ற மாவீரன்!



2008 ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 10 கி.மீ. நீச்சல் போட்டியில் 1 மணி 51 நிமிடம் 51.6 விநாடிகளில் இலக்கை எட்டி நெதர்லாந்து வீரர் வான் டெர் வீச்டென் மார்டீன் தங்கம் வென்றார்.

27 வயதாகும் வீச்டென் மார்டீனுக்கு இரத்தப் புற்றுநோய் இருந்தது 2001-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கடுமையாகப் போராடி 2003-ல் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்றார்.

அவரது விடாமுயற்சியாலும், தளராத மனத்தாலும் இந்த ஆண்டு செவில்லேவில் நடைபெற்ற 25 கி.மீ. போட்டியில் வென்று உலக சாம்பியன் ஆனார்.

வெற்றிக்குக் காரணம் மருத்துவமனையில் கடும் அவதியில் இருக்கும்போது, அடுத்த நாள் அல்லது வாரம் குறித்து சிந்திக்கத் தோன்றாது. அடுத்த மணி நேரம் குறித்தே சிந்திக்கத் தோன்றும். இது எனக்குப் பாடமாக அமைந்தது. இதையே இப்போட்டியிலும் கடைபிடித்தேன்” என்றார்.

ஆலந்தில் உள்ள மிகப் பெரிய ஏரியில் 2004-ல் வீச்டென் நீந்தி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக சுமார் ரூ.30 லட்சம் சேகரித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: