Thursday, December 4, 2008

ஆப்பம் பங்கிட கழுகு வந்துள்ளது-எச்சரிக்கை!

மும்பையில் தற்போது நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப்பிறகு இந்தியா-பாகிசுதானுக்கிடையே பஞ்சாயத்து செய்ய அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அதன் தொடர் நடவடிக்கை பற்றி சிறு கண்ணோட்டம்.


முதலில் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கடுங்கண்டனம் தெரிவிக்கிறார்.


வருங்கால அதிபர் பாகிசுதானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழிக்கலாம் என்கிறார்.



அதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து இந்தியாவிற்கு அனுசரணையாக பேசுகிறார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் கூட்டு இராணுவ தளபதி பாகிசுதானின் இராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார்.

பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாகிசுதான் சென்று அந்த நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் கூட்டு இராணுவ தளபதி இங்கே வந்து இங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்கர்கள் பாகிசுதானிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும் இந்தியாவிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் விளங்கவில்லை.

நமது ஊர்களில் நடக்கும் வாரச்சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கும் தரகர்களுக்கு என்ன வருமானம் வருகிறது என்பது விற்பவருக்கும் தெரியாது, வாங்குபவருக்கும் தெரியாது. அது தரகருக்கு மட்டுமே தெரியும். அதுபோல அமெரிக்காவிற்கு கிடைக்கும் பலன் என்னவென்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.



இந்தியாவிற்கும் பாகிசுதானிற்கும் இடையே கனண்று கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையை அமெரிக்கா தற்போது செய்து வருகிறது என்பது ஊரரிந்த இரகசியம்.
இதை இந்தியாவும் பாகிசுதானும் உணர்ந்து தக்க நடவடிக்கை எடுப்பது இரு நாட்டுக்கும் நல்லது. இல்லையென்றால் பூனைகளுக்கு குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதையாகிவிடும். எச்சரிக்கை!

0 comments: