Sunday, January 11, 2009

தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்!

நமது இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது. இலங்கையில் சிங்கள இனவெறி அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புப் போரை நிறுத்தவேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ தமிழினத்திற்காக “தமிழீழ அரசு” உருவாக குரல் கொடுக்கவேண்டும் -என தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக குரலெழுப்பி போராடி வருகிறார்கள். ஆனால் உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க இந்திய நடுவண் அரசு மறுத்து வருகிறது.

ஈழத்தமிழர்களுக்காக கடந்த ஆறு மாதமாக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் இன்னலை தீர்க்க மனிதநேயத்தோடு இப்பிரச்சனையில் இன்றுவரை இந்திய அரசு ஈடுபடவில்லை என்பதே உண்மை. காரணம் இந்திய அரசு கடைபிடித்து வரும் தவறான வெளியிறவுக் கொள்கையே!

இந்திய அரசு மேற்கொள்ளும் இத்தகைய தவறான போக்கை மாற்ற வேண்டுமென்றால் தமிழகத்தில் போராட்டம் நடத்தி இனி எந்தவித பயனும் இல்லை. “தமிழர்களின் போராட்டக்களம் இனி புது தில்லியாக இருக்கவேண்டும்.”

தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டால் நடுவண் அரசு தன்நிலையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும். தமிழகத்தில் உள்ள இனஉணர்வாளர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் “தமிழீழம்” என்ற இலக்கிற்காக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்.

தமிழினத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்களை தலைவராகக் கருதாமல் ஒரு வீரமிக்க தொண்டராக செயலாற்ற வேண்டும். இதுபோன்ற பணியை மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன், கி.வீரமணி ஆகியோர் ஈடுபட்டுவருவது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

தமிழர்களும் தமிழின உணர்வாளர்களும் இனி தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் ஈடுபடத்தேவையில்லை. நாம் அனைவரும் புதுதில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அது தொடர் போராட்டமாகவும் இருக்கவேண்டும்.

இன உணர்வோடும் எழுச்சியோடும் தமிழின உணர்வாளர்கள் புதுதில்லியை பத்துநாள் முற்றுகையிட்டால் தமிழீழம் தானக பிறக்கும். தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்.

7 comments:

Anonymous said...

தமிழ்நாட்டில் எந்த மத்திய நிறுவனமும்
நடக்கப்பட முடியாதபடி ஒடுக்கப் படவேண்டும்.
தமிழக மக்கள் மன்றத்தை,முதல்வரை,ஒட்டுமொத்தத் தமிழினத்தின் உணர்வுகளை மதிக்காத ஒரு ஆட்சி அதிகாரம் தமிழ்நாட்டில் நட்க்க விடக்கூடாது.
ம்வுனமோகனை மண்டியிடச் செய்ய வேண்டும்.ஏமாற்றியது போதும்.

said...

குடியரசுத் தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும்.

வரும் தேர்தலைத் தமிழர் எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்.

Anonymous said...

மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் புதுடில்லியிடம் கெஞ்சுவதையும் வேண்டுகோள் விடுவதையும் விட்டு விட்டு ஆணைகள் இட வேண்டும்.
இலங்கைத் தூதுவரை வெளியேற்று.
ஐக்கிய நாட்டுச் சபையில் அவசரத் தீர்மானங் கொண்டு வா.
வர்த்தக,படை உதவிகளை உடனே நிறுத்து.
கேட்காவிட்டால் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மத்திய ஆட்சி நிறுவனங்களையும் புதுடில்லிக்கே கொண்டு செல்லுங்கள்.மொத்தத் தமிழகமும் வரி கட்ட மாட்டோம்.
விவேகத்துடன் கூடிய வீரத்தையுங் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

said...

rather than boycotting the elections,we can vote for the party
which supports the Eelam tamils..

Anonymous said...

please go to this website and sign the petition to stop the genocide against eelam tamils.
www.tamilsforobama.com

Anonymous said...

திர்வரும் சொற்ப காலங்களில் மாபெரும் மனிதப்பேரவலம் நிகழவிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படவிருக்கின்றார்கள். இது சுனாமியை விட பன்மடங்கு மோசமானதாக இருகும். இன்று வரை இலங்கைப் படைகள் தாம் பிடித்துவிட்டதாக கூறப்பட்ட பிரதேசங்கள் குறித்து இராணுவக் கண்ணோட்டத்துடன் அணுகிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை படைகள் ஒவ்வொரு பிரதேசங்களும் பிடித்தவுடன் வெளிவிடும் வரைபடங்கள் ஊடாக இராணுவத்தின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றத��
�. தமிழ் மக்களும் அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருக்கின்றர��
�. ஆனால் மக்கள் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் வழித்து ஒரு சிறுவட்டத்துள் நகர்த்தப்பட்டுள்ளனர். இந்த சிறு வட்டத்துள் தான் இனி யுத்தம் நடக்கவிருக்கின்றது. இந்த வட்டத்துள் இனி விழும் ஒவ்வொரு குண்டும் பல நூறு உயிர்களை காவுகொள்ளப்போகின்றது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எவரும் விதிவிலக்கின்றி சிதறி சின்னபின்னமாகப் போகின்றார்கள். இதுவரை காணாத கோர தாண்டவம் இனி அரங்கேற இருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வருவதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இதனால் இனிமேல் நடக்கவிருக்கும் மனிதப்பேரவலம் குறித்து முதலில் சர்வதேசம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. எல்லாம் முடிந்தபின்னர் கண்டன அறிக்கைகள் விடலாம் அல்லது இரணுவம் பெற்ற வெற்றிகளில் அது மறைந்து போகலாம். யுத்தம் முடிவுக்கு வந்த கதையே இனி பேசப்படலாம்.

சுமார் ஒருலட்சம் மக்கள் யுத்தம் நடக்கவிருக்கும் பிரதேசத்தில் அகப்பட்டு இருப்பதாக இலங்கை அரசு பிரச்சராம் செய்கின்றது. அகப்பட்டு இருப்பது மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள். இனி நடக்கவிருக்கும் யுத்தத்தில் குறைந்தது முன்று லட்சம் மக்கள் பலியாவார்கள் என்பதே இலங்கை அரசின் கணக்கு. அவ்வாறு நடப்பதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகம்.

இப்போது தமிழர்வசம் இருக்கும் மக்களால் நிரம்பி வழியும் மிகச் சிறு பிரதேசத்தில் இருந்து மாபெரும் எதிர்ப்பு தாக்குதல் நடக்கும். அலையாய் படைகள் கிழம்பும். ஸ்டாலின் கிராட் போல் ஒரு பெரும் யுத்தம் நடக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டபடி தமிழ் மக்கள் வழிநடத்தப்படுகின்றனர். இந்தக் கணக்குகளை தமிழ் மக்கள் போடுவதை விட பல மடங்கு அதிகமாக இலங்கை படைகள் மற்றும் அதை வழிநடத்தும் சர்வதேச இராணுவ ஆலோசகர்கள் போட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மை. எந்த யுத்தம் எப்படி நடந்தாலும் எந்தவித எதிர்பார்ப்புக்கும் அப்பால் மக்கள் இங்கே அழிக்கப்படப்போகின்றார்கள் என்பதே உண்மை. ஈழத்தமிழர் வரலாற்றல் என்றுமில்லாதவாறு மனிதப்பேரவலம் ஏற்படப்போகின்றது.

எமது உறவுகளுக்காக இறுதியாக தெருவில் இறங்கி போராட வேண்டிய காலகட்டம் இது. இன்றய காலகட்டத்தில் யுத்தம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிடில் என்னுமொருநாள் வீதியில் இறங்கி மகிந்தாவுக்கும் பென்சேகாவுக்கும் தண்டனை வாங்கி கொடுப்பது குறித்து போராடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை.

இராணுவம் புலிகள் அவர்களது இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றில் தமிழ் மக்கள் சிக்குப்படாமல் கொல்லப்படப்போகும் மக்களை கவனத்தில் எடுப்பது அவசியமானது. இந்த அவலம் நடக்கப்போகின்றது என்று தெரிந்தும் தமிழர்கள் பாரமுகமாக இருந்தால் அது கொலைக்கான அனுமதியாகவே அமையும். இந்த மக்களை நோக்கி சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனுப்பப் படுதல் அவசியமானது. அதற்கான கோரிக்கைகள் போராட்டங்கள் அவசியமானது. தமிழன் சக தமிழன் சாகும் தருணத்தில் காப்பாற்ற இது தான் கடைசி சந்தர்ப்பம்.

இலங்கையின் கிழக்கில் பல தமிழ் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். கடந்த வாரம் மட்டும் யாழ்பாணத்தில் எழு சடலங்கள் கரை ஒதுங்கிஉள்ளன. இலங்கை ராணுவம் பிடித்து செல்லும் மக்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுவதாக வந்த செய்தி கரை ஒதுங்கும் சடலங்களினூடாக உண்மை ஆகின்றது. இப்போது வன்னியில் சிக்குப்பட்டுள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றாலும் நிச்சயம் கொல்லப்படுவார்கள். புலிகள் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்த இந்த மக்களை கொல்வது அரசின் பிரதான தெரிவாகவே இருக்கும். கடந்த காலத்தில் சிங்கள கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய போது கிளர்ச்சியாளர்களின் குடும்பங்கள் உறவினர்கள் அனைவரையும் கொன்றொழித்தது அவர்கள் தேர்வாக இருந்தது. இப்போது யுத்த பூமியில் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு மரணம் ஒன்றே எவ்வகையிலும் முடிவாக உள்ளது. உலகத் தமிழர்கள் இந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு யுத்தத்தை நிறுத்த உடனடியாக குரல் கொடுக்க வேண்டிய இறுதிக் கட்டம் இது.

said...

//தமிழகமும் வரி கட்ட மாட்டோம்.///
என்னையா முட்டாள்தனமாக சொல்கிறீர். நீங்கள் வரி கட்டாவிட்டால் தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட 2000 கோடி போல எப்படி கொடுப்பது. உங்கள் வரிப்பணத்தில் தான் இப்போது உளவுவிமானம், ராடர், இராணுவ உதவியெல்ாம் செய்கிறார்கள் மத்திய அரசு. நீங்கள் வரிகட்டாவிட்டால் எப்படி சிறிலங்கா அரசு தமிழர்களை கொல்லும். பாவமல்லா சிறிலங்கா அரசு?