ஈழத்திலே சிங்கள் தமிழர்களை கொன்று குவித்தால்...
தமிழன் சிங்களனை திருப்பி தாக்கூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்.
அண்ணன் தம்பிகளின் கண்முன்னே தமிழ்ப்பெண்களை சிங்களன் வன்புணர்ச்சி செய்தால்...
அண்ணன் தம்பிகள் சிங்களனை தடுக்கக்கூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்.
சிங்கள இனவெறி அரசு தமிழனத்தின் மீது கொத்துக்குண்டுகளை வீசி கொண்று குவித்தால்...
தமிழீழ அரசு திருப்பித் தாக்ககூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்புபணியை தமிழக அரசு ஊழியன் செய்யுபோது...
மளையாளிகள் தமிழ்நாடு அரசு ஊழியனை விரட்டி அடித்தாள்...
தமிழ்நாடு அரசு அதை குறைந்த பட்சம் கண்டிக்கக்கூடாது...
மானமுள்ளவர்கள் யாராவது கேரளாவுக்கு செல்லும் பாதைகளை அடையாளத்திற்காக மறித்தால் கூட...
சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்...
இப்படி எதற்கெடுத்தாலும் சனநாயகப்பாதையிலேயே அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டும் என்று வாய்கிழிய பேசும் இந்திய கம்யூனிஸ் கட்சி (மார்க்கசிஸ்ட்) இன்று மக்கள் தொலைக்காட்சியின் மீது வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. உங்களுடைய சனநாயகப்பாதை என்னவென்று தமிழ்நாட்டு மக்களுக்கு இன்றுதான் புரிந்தது...
சனநாயகம் என்பது ஒருவழிப்பாதையல்ல என்பதையும் மார்க் சிஸ்டுகள் இன்று உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு தோழர்களே!...
உங்கள் வாதப்படி உ.ர.வரதராசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று வைத்துக்கொண்டாலும், தற்கொலையை தூண்டிவதும் குற்றம் என்று இந்த நாட்டு சட்டம் சொல்லுது, தமிழ்நாடு காவல்துறையிடம் நீங்கள் யாரை சரணடைய வைக்கப்போகிறீர்கள் என்று உங்கள் பொலிட் பீரோ கூட்டி முடிவெடுங்கள்....
Friday, March 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சிதம்பரத்தில் போலீஸ் துரத்தியபோது வாய்க்காலில் விழுந்த மாண்வர்களுக்காக சி.பி.ஐ விசாரணை கேட்கும் சி.பி.எம் கட்சியினர், வரதராஜன் ஏரியில் விழுந்ததுக்கு விசாரணை கேட்காதது ஏன்?
உண்மையில் மார்சிசம் என்பது வேறு. மார்க்சிஸ் கட்சி என்பது வேறு.
நான்கூட கொஞ்சகாலம் இந்த சிவப்பு கொடியைப் பார்த்து ஏமாந்தவன்தான். நாட்டை காப்பாற்ற இவர்களை விட்டால் யாரும் இல்லை என்றுகூட நினைத்திருந்தேன்.
காங்., ப.ச.க., ஆர்,எஸ்.எஸ்., தி.மு.க.-வை விட இவர்கள் மோசமானவர்கள் என்பதை இப்போது முழுமையாக உணர்ந்துள்ளேன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment