தந்தை பெரியார் மானமும் அறிவும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க உயிருள்ளவரை திராவிடர் கழகத்தை வளர்த்தெடுத்தார்.
தமிழினத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தை தந்தை பெரியார் இறப்பிற்குப்பின் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொந்தமான வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்ட மானமிகு தமிழர் தலைவர்(!) வீரமணியார் அவர்கள் அவ்வப்போது அறிக்கைகளின் மூலம் மட்டுமே தன் இருப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தன் வாழ்நாளில் விரமணியார் மேற்கொண்டிருக்கும் தலையாயக் கடமை தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசை பாதுகாப்பது மட்டுமே. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விடும் அல்லவா? அதனால் கண் துஞ்சாது தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசை கட்டிக்காக்கும் பெரும்பொறுப்பு இந்தப் பூனையிடம் உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள தி.மு.க. அரசை காப்பாற்றி வருகிறார். (இவரால ஒரு ம...ம் ஆகாது என்பது தொடர்புடைய அனைவருக்கும் தெரியும்...).
நானும் இருக்கிறேன் பார்! என்பதற்காக தற்போதைய தி.மு.க. - பா.மக. அரசியல் சூழலில் நாளேடுகளில் இன்று (19.06.2008) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “சுயமரியாதை உணர்வோடு தமிழ் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இழி சொற்களை தாங்கிக் கொண்டு பா.ம.க.வோடு உறவை தொடருவது சரியாக இருக்குமா” என்றும்,
“திராவிட இயக்கத் தோள்களின் மீது ஏறி நின்று பயனடைந்துவிட்டு, திராவிட இயக்கங்களையே இன்று பா.ம.க. தலைமை எள்ளி நகையாடுவதை திராவிட இயக்கங்கள் மனதில் பதியவைத்து கொள்ளாமல் இருக்கமுடியுமா?”
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், போலிசாரையும் கூட தரக்குறைவாக ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் விமர்சிப்பது ஒரு தவறான முன்மாதிரி அல்லவா”. என்று வினா எழுப்பியுள்ளார்.
ஐயா நல்லவரே எங்களைபோன்ற சாதாரண தமிழனுக்குள்ள கேள்வி என்னன்னா,
- தொடர்ந்து தந்தை பெரியார் கூட இருந்து திராவிடர் கழகத்தில் பணி செய்தால் சுயமரியாதை கெட்டுப்போய்விடும் என்பதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதா? சுயமரியாதைக்காக தொடங்கப்பட்ட தி.மு.கவில் நீங்க ஏன் போய் சேரல...
- உண்மையான தி.மு.க.வினர் யாரும் அ.இ.அ.தி.மு.க.-வை இன்னும் திராவிட இயக்கமா ஏற்றுக்கொள்ளவில்லை... இந்த நிலையில அ.இ.அதி.மு.க.-வை நீங்க திராவிட இயக்கமா ஏற்றுக்கொள்கிற்களா? இல்லையா?...
- அ.இ.அ.தி.மு.க.வை நீங்கள் திராவிட இயக்கமா ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் தற்போது ஒரு பாப்பாத்தி தலைமையில் இயங்கும் இயக்கத்தை நீங்கள் எப்படி திராவிட இயக்கமுன்னு சொல்றீங்க...
- நீதிமன்றத்திலேயே நீதிபதியையும் அவங்க சொன்ன நீதியையும் துணிச்சலா எதிர்த்த பெரியார் வழி வந்ததாகச் சொல்லும் நீங்கள் அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல் எப்படி தவறான முன்னுதாரனம் ஆகும். ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டப்போது... கைது செய்ய வந்த காவலர்களை கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் தரக்குறைவாக பேசியானர்கள் என்பது தாங்கள் அறிந்ததுதான்... அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது நாடறிந்த இரகசியம்...
வெட்கக்கேடு....
புதியதாக அரசியல் கட்சி தொடங்கி அரசியல் பேசுகின்ற நடிகர்களுக்கு இருக்கும் தகுதி கூட வீரமணிக்கு இல்லை என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்
காட்டுமோட்டான்
2 comments:
வணக்கம்,
மிகச்சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
தோழருக்கு நன்றி!
Post a Comment