Sunday, January 18, 2009

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.

மேலும் இலங்கை தமிழருக்கு அதிக சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஒருபோதும் அவர் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. சிறிலங்கா போர் தளபதி சரத் பொன்சேகா சிறப்பாக செயற்படுகிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

முல்லைத்தீவில் முற்றுகையிடப்பட்டுள்ள சில லட்சம் தமிழர்களை கடல் வழியாகவும், வான்வழியாகவும், தரை வழியாகவும் சிறிலங்கா இராணுவம் தாக்கி வருகிறது.

இது தொடர்பாக நம்முடைய செயலாளர் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏன் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்திடம் அரசிடம் போர் நிறுத்தத்தை தொடர்பாக பேச வேண்டாம் என்று சொல்லி தானே அவரே அனுப்பி வைத்திருக்கிறது. அப்படியென்றால் இந்திய அரசாங்கம், இந்திய தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவமானப்படுத்தி விட்டது என்று தானே அர்த்தம்.

மத்திய அரசின் இந்த கடும் பாதக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள். இது தொடர்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே சமயத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து நாங்கள் பேச இருக்கிறோம்.

முதலமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழருக்காக தியாகம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் என்ன தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

50 ஆண்டுகாலம் முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம். இதுவரை தோற்று வந்ததாக தானே அர்த்தம்.

சரி அதனை விட்டு விடுவோம். இதற்கு முன்பு தி.மு.க. மத்திய அதிகாரத்தில் இல்லை. இப்போது காங்கிரசுக்கு சரி பாதியாக இருக்கிறார்களே? இப்போது ஏன் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் அமைச்சில் தி.மு.க. உள்ளது. அப்படியிருந்தும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தமிழனை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை ஏன் இவர்கள் வற்புறுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் எண்ணம் சிங்கள இராணுவத்திற்கு இல்லை என்றும், விடுதலைப் புலிகள் தான் தமிழ்மக்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றும் ஜெயலலிதா கூறியதாக வரும் தகவல்கள் தொடர்பாக எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறு. ஏனெனில், சிங்கள இராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவிப்பது எல்லோருக்கும் தெரியுமே.

இது தொடர்பாக உண்மை நிலைய அறிய வேண்டுமானால் நடுநிலையாளர்களான 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி, அங்குள்ள நிலைமைகளை கண்டு வர சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடவும் நாங்கள் தயாராகவும் இருக்கிறோம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

1 comments:

said...

"ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு"
சிறப்பு ஐயா சிறப்பு
உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் ஜெயலலிதா : தா. பாண்டியன் - ஜெயலலிதா தன் நிலையும் தம் பார்ப்பன இனத்தின் நிலை மட்டுமே அவளுக்கு தெரியும்
பார்ப்பனர்களுக்கு(வெகு சிலர் தவிர) தமிழ் மிதும் தமிழர்கள் மிதும் அன்பும் பற்றும் இருந்த்தில்லை இவள் மட்டும் என்ன விதிவிலக்கா