Thursday, March 19, 2009

ஏப்ரல் 14 ஆம் நாளுக்கு முன்பு புலிகளை அழியுங்கள்: இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு சிறீலங்கா அரசுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், இந்தியப் புலனாய்வுத் துறையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என கங்கணம்கட்டி நிற்கின்றனர். இதற்கு உடந்தையாக இருப்பதன்மூலம் அடுத்த தவணையும் ஆட்சியை தக்க வைக்க முடியும் எனவும் சோனியா காந்தி தலைமையிலான கொங்கிரஸ் கட்சி எண்ணுகின்றது.

இதனாலேயே தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனை திசை திரும்பும் வகையில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி மற்றொரு தமிழீழ ஆதரவுப் போராட்ட நாடாகத்தை அரங்கேற்றுவதாகவும், ஈழத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படுகின்ற போதிலும், கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

கடந்த மாதம் 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் நடைபெற்ற உலகின் தொழிற்கட்சி மற்றும் இடதுசாரிகளின் நாள்காம் மண்டல மாநாட்டின்போது ஊடகவியலாளர்கள் மத்தியிலும், பின்னர் நெதர்லாந்தின் முன்னணி வானொலிச் சேவை ஒன்றிற்கும் கருத்துரைத்த இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஈழத்தமிழ் மக்கள் மீது தற்போதைய போர் முற்றாகவும், நேரடியாகவும் இந்திய அரசினால் முன்னெடுக்கப்படுவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 17ஆம் நாள் சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த சிறீலங்காவின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிமால் சிறீபால டி சில்வா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது போரில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், இந்தியாவிற்கு சிங்கள மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா படைகளின் முக்கிய தளபதி ஒருவர், கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னரும், அதற்கு முன்னரும் இந்தியாவே வன்னியில் போரை முன்னெடுப்பதாகவும், தமது படைகள் பெயரளவிலேயே அங்கு பணிகளில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா முப்படைத்தளம் மீது 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9ஆம் நாள் வான் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, அங்கு ராடர் கருவிகளை இயக்கிவந்த இரண்டு இந்தியப் படையினர் காயமடைந்த தகவல் வெளியுலகிற்குக் கசிந்திருந்தது.

இதன் பின்னர், சிறீலங்கா படைகளுக்கான இந்தியப் படைத்துறை உதவிகள் மிக இரகசியமாக வழங்கப்பட்டு வருவதாகக் கருதப்படும் நிலையில், வன்னி களமுனைகளில் இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

இவற்றை மூடி மறைப்பதற்காகவும், வேறு சில படைத்துறைக் காரணங்களுக்காகவுமே, வன்னியில் காயமடைந்த மக்கள் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலும், ஏனைய சிலர் திருகோணமலை நகருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லையிலுள்ள புல்மோட்டைக்கு இந்திய படைத்துறை மருத்துவர்கள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நன்றி: தமிழ்வின்.காம்

2 comments:

Anonymous said...

காங்கிரசிற்குத் தமிழ்நாட்டில் கல்லறை
கட்ட வேண்டும்.
போலி வேடம் போட்டு ஈழத்தமிழர் இன அழிப்பை தங்களது அரசியலுக்கு ஊறுகாய் ஆக்கிக் கொண்ட துரோகிகளுக்குக் காலம் கட்டாயம் பதில் தரும்.
ஈழ ஆதரவாளர்களின் ஒற்றுமையில்லாத,மற்ற ஆதரவாளர்களை உடன் அனைத்துச் செல்ல ஆவன செய்யாமல் வெறும் உணர்ச்சியிலும் பிடிவாதத்திலும் இருந்த நெடுமாறன் போன்றோர் தங்களது பிடிவாதத்தால் இழந்தது தான் வேதனை.

said...

வரும் நாடாளுமன்ற தேர்ததலில் காங்கிரசுக்கும் தமிழின துரோகி கருணாநிதிக்கும் பாடம் கற்பிப்பதன் மூலம் பிற தலைவர்களுக்கும் அது எச்சரிக்கையாக இருக்கும்...

துரோகிகளை முதலில் கவனிப்போம்...

நெடுமாறன் எப்போது பிடிவாதத்தோடு நடந்துகொண்டார்?

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் நாற்பது ஆண்டுகால ஆட்சியில் தமிழின உணர்வும் தமிழின உரிமை போராட்டமும் மங்காமல் இருக்க நெடுமாறன் அவர்கள் ஆற்றிய பணியும் தியாகங்களும் மகத்தானது.