தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கு “தமிழர் மட்டுமே போட்டியிட வேண்டும்” என்று புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.
காலம் கடந்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், தமிழ்-தமிழர்-தமிழ்நாடு நலனுக்கு நன்மை பயக்கும் நல்ல முடிவு. இம்முடிவில் தொடர்புடையவர்கள் உறுதியுடன் அதை நடைமுறைபடுத்த வேண்டும். இது போன்று தமிழ் திரைப்படம் தொடர்புடைய பிற சங்கங்களிலும் விதியை உருவாக்கி நடைமுறை படுத்தவேண்டும்.
இதை கண்டித்தும் எதிர்த்தும் சில சலசலப்புகள் எழுந்துள்ளன. சரத்குமாரும் தற்போது அவருக்கு பொஞ்சாதியாக இருப்பவரும், இது போன்று பலருக்கு பொஞ்சாதியாக இருந்தவருமான இராதிகா போன்ற தமிழ்த் திரையுலக மேதைகள்...
“கலைக்கு மொழி, சதி, மதம் எதுவும் கிடையாது.”
“அரசியலில் வேண்டுமானால் தமிழர் மட்டும் போட்டியிடலாம். திரைப்படத்துறையில் அப்படி போட்டியிடக் கூடாது.”...
என்பது போன்ற தத்துவங்களையும் மாந்த நேயப் பண்புகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஏண்டா! வெண்ணைங்கலா... மலையாள திரையுலகமும் கன்னட திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் வடநாட்டு திரையுலகங்களும் இது போன்ற விதிகளை வைத்துள்ளதே அதைப்பற்றி நீங்க ஏண்டா வாயத்திறக்காம இருக்கிங்க...”
என்று சாதாரண பாமரனும் கேள்வி எழுப்புகிறான். அவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன? அல்லது மற்றவர்கள் கலைஞர்கள் இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா?
விருந்துண்ண வந்தவனுக்கும்... பிழைக்க வந்தவனுக்கும் இங்கே வாழ வழியுண்டு... அதற்காக தமிழனின் வீட்டையோ படுக்கையையோ கண்டவனுக்கும் பங்குபோட்டு தரமுடியாது...
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கரிகாலன் ஐயா, வணக்கம்.
தங்களின் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகின்றேன். தமிழ்நலம் பேணும் தங்களின் எழுத்துகளின் வன்மையைப் பெரிதும் வரவேற்கிறேன்.
வேறு எந்த இனத்தானுக்கும் இல்லாத 'பெரிய' மனது இந்த (சுயநலத்) தமிழனுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறதோ தெரியவில்லை!
மற்றவன் இனநலம் பேசினால் அதனை ஏற்றுக்கொள்கிறான் தமிழன். ஆனால், இன்னொரு தமிழன் இனநலம் பேசினால் அதனை வெறித்தனம் என்று தமிழனே சொல்கிறான். இப்படிப்பட்ட தன்னலத் தமிழனுக்குத் தாங்கள் கொடுக்கின்ற அடி மிகச் சரிதான்.
Post a Comment