2011-ல் 30 இலட்சம் பேருக்கு வேலை அளிக்கும் “புதிய தகவல் தொழிந்நுட்ப கொள்கை”-யை தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்-னு எல்ல ஊடகத்திலும் இன்னிக்கு செய்தி வந்திருக்கு...
இந்தத்துறையில 250 கோடி ரூபாய் முதலீடு போடுகிறவனுக்கு 1.5 கோடி உதவித் தொகை... 5 ஆண்டு வரிவிலக்கு... பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு... 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம்... துணை நகரம்... அடிப்படை கட்டமைப்பு... தரமான சாலை... இப்படி நிறைய சலுகைகளை வாரி வழங்க இருக்காங்க...
இப்படி ரூ.200 கோடி முதலீடு... ரூ.150 கோடி முதலீடு... ரூ.100 கோடி முதலீடு... ரூ.50 கோடி முதலீடு... ரூ.5 கோடி முதலீடு... ன்னு தகவல் தொழில் நுட்பத்துறையில பத்து ரூபாய முதலீடு போட்டு (ரூ.10) பத்தாயிரம் ரூபாய் (ரூ.10,000) அள்ளுகிறவனுக்கேல்லாம் அரசாங்கம் வாரி வாரி சலுகையை வழங்குது...
மக்களுடைய அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி, கல்வி, மருத்துவம் இந்தத்துறையை கண்டுக்கத்தான் யாருமில்ல... மனுசன மானத்தோட வாழவைக்குற துறைகளுக்கு இம்மியளவு தூக்கிப்போட்டு... தகவல் தொழில் நுட்பத்துறைக்கு வாரி கொட்டுறது என்னய்யா நியாயம்...,
உங்க வாதப்படியே படிச்சவனுக்கு வேலை கொடுப்பதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கிறதாவே வச்சிக்குவோம்... அந்தத்துறையில அப்படி என்னதான் வேலை செய்யுறானுங்க...

அமெரிக்கக்காரனுக்கும் ஐரோப்பாகாரனுக்கு கணக்குப்புள்ள வேலையும் எடுபிடி வேலையும் பாக்குறத தவிர அங்க என்ன உருப்படியா நடக்குது... அந்தத்துறையே நாசாமா போனாக்கூட உலகத்துல எவனும் பட்டினி கிடந்து சாகப்போறது இல்ல...
ஆனா நாட்டுல விவசாயமே இல்லன... அவனவன் எதடா திண்ணு உயிர்வாழுவிங்க...
ஆனா நாட்டுல விவசாயமே இல்லன... அவனவன் எதடா திண்ணு உயிர்வாழுவிங்க...
இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விசயத்த கருணாநிதி தெளிவுபடுத்துனும்... (அவரு எதையுமே தெளிவா பேச மாட்டார், செய்யமாட்டார் என்பது வேறு விசயம்) உணவு உற்பத்தி தமிழ்நாட்டுக்கு வேணுமா? வேணாமா?
வேண்டும்; அப்படின்னா விவசாய விளைநிலங்களையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கவும், அதை வளர்க்கவும் உங்க வாழ்நாள்ள ஏன் இதுவரைக்கும் உருப்படியான நடவடிக்கை எடுக்கல...
வேண்டாம்; அப்படின்னா தமிழ்நாட்டு மக்கள் உணவுத்தேவைக்காக இந்த தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
இல்ல; தமிழ்நாட்டு மக்கள் 2011-ல் பிளாப்பி, சி.டி, டி.வி.டி., ஆர்டுவேரு, சாப்ட்டுவேரு இதெல்லாம் திண்ணு உயிர்வாழ கத்துக்கொடுக்க ஏதாவது பன்னாட்டு கம்பெனிகூடயோ ஆந்திராகாரனுங்க கம்பெனிகூடயோ ஒப்பந்தம்போட்டு தமிழனை அடகு வச்சி கருணாநிதி குடும்பத்துக்கு தொடர்ந்து தரகுக்கூலி கிடைப்பதற்காக திட்டம் ஏதாவது வச்சிருக்கிங்களா...
யானை கட்டி போரடிச்ச தமிழனை சோத்துக்காக கண்டவங்ககிட்ட கையேந்த வைச்சிடாதிங்கடா பாவிங்களா...
3 comments:
அதிக வருவாய் உள்ள பிரிவுகள் அரசாங்கத்திடம். உதாரணம். டாஸ்மாக்.
அதைவிட அதிக வருவாய் உள்ள ஐ.டி. துறையை அரசு கையகப்படுத்த்தக்கூடாதா?
அரசு மருத்துவமனையில் எந்த அரசியல்வாதியாவது வைத்தியம் பார்த்திருக்கிறாரா?
கல்விக்கூடங்கள் காசுகாய்க்கும் மரங்களாகிவிட்டன. ஏதோ பின்னூட்டம் போடனும்னு நினைச்சேன் போட்டுட்டேன்.
ஒரு முறை அடிமையாக இருந்து பழகிவிட்டால், அது நம்மை ஆயுள் முழுதும் முன்னேற விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும் என சொல்லுங்க. இன்னும் சொல்லப் போனால், இதிலேயே ஒரு வித சுகத்தையும் காண பழகிக் கொள்கிறோம். தமிழனையே சக தமிழன் அடிமையாக வைத்து நடத்துகிறபோது இவனும் இவன் பங்கிற்கு அடிமையாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான். முதலில் நம் தமிழ் சமுதாயத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஆரம்பமே இங்கிருந்துதான் கிளம்புகிறது.
மேலும், அரையணா காசுக்கு பிரயோசனம் இல்லாத காய்மாட்டிகள் எல்லாம் அரசியல் மேடைக்கு வந்து கூலிக்கு மாரடிக்கிற போலிகளாக சமுதாயத்தை சீரழித்து வருவதையும் தடுத்து நிறுத்தவேண்டும்.
விழிப்புணர்வூட்டும் நல்ல கருத்தாழமிக்க பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.
நேரம் கிடைத்தால் இதைப்பற்றி இன்னும் நிறையவே விவாதிக்கலாம். அதுவரை ... வணக்கம்.
பதிவும் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளும் அருமை...
தலைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டு. நிலைமையை சுளீர்னு உணர்த்துகிறது...
Post a Comment